என்னை மாதிரியே நடிக்கிறியாமே.. வளர்ந்து வரும் நடிகரை ஆள் வைத்து அடித்த வடிவேலு

303 0

வடிவேலு

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட நடிகர். தற்போது மாமன்னன் படம் மூலமாக குணச்சித்திர நடிகராகவும் எல்லோரையும் கவர்ந்து இருக்கிறார். அடுத்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் பலருக்கும் தெரியாத வடிவேலுவின் இன்னொரு முகத்தை பற்றி நடிகர் காதல் சுகுமார் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.என்னை மாதிரியே நடிக்கிறியாமே.. வளர்ந்து வரும் நடிகரை ஆள் வைத்து அடித்த  வடிவேலு

ரத்தம் வரும் அளவுக்கு அடிச்சாங்க..

சுகுமார் வடிவேலு போலவே தோற்றத்தில் இருந்ததால் அவர் ராஜ் டிவியின் ஊர்வம்பு நிகழ்ச்சியில் வடிவேலு போலவே perform செய்து வந்தார். அதன் மூலமாக அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் வந்தது. தவசி என்ற படத்தில் அவர் வடிவேலு போலவே மேனரிசம் காட்டி நடித்து இருக்கிறார்.

அதே போல நடிக்க பல கம்பெனிகளில் இருந்து அவருக்கு வாய்ப்பு வர தொடங்கி இருக்கிறது. அப்போது வடிவேலு உடன் இருக்கும் நடிகர்கள் இருந்து பேர் வந்து சுகுமாரை வடிவேலுவிடம் அழைத்து சென்று இருக்கின்றனர்.

‘என்னை மாதிரி நடிப்பேன்னு கம்பெனி கம்பெனியா போய் சொல்லிட்டு இறுக்கியாமே’ என வடிவேலு கேட்டாராம். ‘அப்படி வாய்ப்பு வருகிறது, முதல் படம் என்பதால் நடித்துவிட்டேன், இனி நடிக்க மாட்டேன் அண்ணே’ என சுகுமார் பம்மி இருக்கிறார்.

அப்போது அங்கிருந்தவர்களை எல்லாம் வெளியில் அனுப்பிவிட்டு சுகுமாரை வடிவேலுவின் ஆட்கள் தாக்கினார்களாம். ரத்தம் வரும் அளவுக்கு அடித்து தான் அனுப்பினார்கள்.

இந்த அவமானத்தில் தவறான முடிவை எடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டேன். என் மனைவி தான் என்னை தடுத்தார்.

அதற்கு பிறகு தான் காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, இதற்கு முன் இருந்த வடிவேலு சாயலே தெரியக்கூடாது என இயக்குனரிடம் சொல்லி முற்றிலும் வேறு விதமாக நடித்தேன் என சுகுமார் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Related Post

லியோவில் நடித்த பிக்பாஸ் சாண்டி.. வேற மாதிரி பாப்பீங்க

Posted by - August 23, 2023 0
லியோ தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது லியோ படத்திற்காக தான். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில்…

பாடகி அனுராதாவின் கணவரா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க

Posted by - March 14, 2023 0
பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி அசத்தியவர் தான் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பம்பாய்” படத்தில் இடம் பெற்றுள்ள மலரோடு மலர்ந்து என்ற…

10 நிமிடத்தில் செய்யலாம் மட்டன் மூளை மிளகு மசாலா

Posted by - March 17, 2023 0
தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள் மட்டன் மூளை – 200 கிராம் சின்ன…

100 நாட்களில் துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூல்.. அதிக லாபம் கொடுத்த படம் எது தெரியுமா

Posted by - April 19, 2023 0
வாரிசு – துணிவு வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்தது. இதில் வாரிசு முதல் சில நாட்களில் கலவையான விமர்சனங்களை…

குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - November 11, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இப்போது பரபரப்பின் உச்சமாக ஒரு விஷயம் நடக்கிறது. அதாவது குணசேகரன் பற்றிய ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இராமேஸ்வரம் சென்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *