ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு: 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்

306 0

19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன. இந்த பெரும் போர், இரண்டாம் உலக போர் என அழைக்கப்படுகிறது.

இப்போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை ஜெர்மனி கூட்டணி நாடுகள் மீது வீசின. அதில் பெரும்பகுதி ஜெர்மனி மீது வீசப்பட்டது. இவற்றில் பல வெடித்தாலும் ஒரு சில வெடிக்காமல் பூமியில் புதைந்தன. போர் முடியும் நேரத்தில் ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டது. அந்நாட்டில் இதனால் பல வெடிகுண்டுகள் பூமிக்கு அடியில் வெடிக்காமல் புதையுண்டு போனது. பல தசாப்தங்கள் ஆன பிறகும் ஆங்காங்கே அவற்றில் சில கண்டெடுக்கப்பட்டதாக அவ்வப்போது தகவல்கள் வருவதுண்டு.

ஜெர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ஃப் (Dusseldorf) பகுதியில் உள்ள ஒரு மிருககாட்சி சாலையில் இம்மாதம் முதல் வாரத்தில் 1 டன் எடையுள்ள ஒரு வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து அதனை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்டனர். இதன் ஒரு பகுதியாக, அந்த குண்டு கிடப்பதாக சொல்லப்படும் இடத்திற்கருகே சுமார் 1640 சதுர அடி சுற்றளவில் (500 meter radius) உள்ள இடங்களில் உள்ள அனைத்து மக்களையும் வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதனால் சுமார் 13 ஆயிரம் பேர் தற்காலிகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினர். வெளியெறியவர்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையின்போது அந்த இடத்தை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டது. தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை எப்போது முடிவடையும் என்பதும் தற்காலிக தடை நீக்கப்பட்டதா? என்பது குறித்தும் தற்போது வரை தகவல்கள் இல்லை.

Related Post

குடிபோதையில் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் படுத்து உறங்கிய அமெரிக்கர்கள்

Posted by - September 1, 2023 0
பிரான்ஸ், பாரிஸிற்கு சுற்றுலா வந்த இரண்டு அமெரிக்கர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியின் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈபிள் கோபுரம் பொதுவாக காலை 9மணிக்கு சுற்றுலா…

வீழ்த்தப்பட்ட 800 ஆண்டு பழமையான இனம்! உலகை அதிர வைத்த 21 வயது பெண் எம்பி! இது மாவோரி இனத்தின் வரலாறு

Posted by - January 6, 2024 0
வெலிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி இனத்தைச் சேர்ந்த 21 வயது பெண் முழக்கமிட்ட வீடியோ டிரெண்டாகியுள்ள நிலையில், இந்த மாவோரி இன மக்கள் யார்.அவர்கள் வரலாறு என்ன…

பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் பதிலடி – குவியும் பிணங்கள், எல்லையில் நடப்பது என்ன?

Posted by - February 27, 2026 0
ஆஃப்கானிஸ்தான் மீது போரை தொடங்குவதாக பாகிஸ்தான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் வெடித்த மோதலில், இருதரப்பில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்… இனி க்ரூப் சாட்டில் எவ்வளவு பேர் ஆன்லைனில் இருக்காங்கன்னு பார்க்கலாம்…

Posted by - December 10, 2024 0
குரூப் சாட் செய்யும்போது க்ரூப்பில் ஆன்லைனில் உள்ளவர்களின் எண்ணிகையை பார்க்கும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பிரபல வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியானது முக்கியமான இரண்டு புதிய…

காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்

Posted by - March 4, 2026 0
1. முதல் காரணமாக, இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறிப்பிடலாம். இந்தியா பல ஆண்டுகளாகவே இஸ்ரேலுடன் நட்புறவில் இருக்கிறது. இந்த உறவு சமீப ஆண்டுகளில் பன்மடங்கு வலுப்பெற்றுள்ளது. 2. இந்தியாவுக்கும் ஈரானுக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *