சாதி தலைவராக மாறிய ரத்தினவேல்..சர்ச்சைக்கு பகத் பாசில் குறித்து பேசிய மாரி செல்வராஜ்

205 0

சாதி தலைவரா?

கர்ணன் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தார்.

இப்படத்தில் சாதி வெறி பிடித்தவராகவும், அரசியல் வாதியாக தத்துரூபமாக பகத் பாசில் நடித்திருப்பார். இவரின் நடிப்பு பாராட்டுக்கள் வந்தாலும், சிலர் ரத்தினவேலை சாதி தலைவராக சித்தரித்து சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.பகத் பாசில் நீங்களும் இப்படி செய்யலாமா.? பாவம்யா மாரிசெல்வராஜ்.. .

மாரி செல்வராஜ் ட்வீட்

இந்நிலையில் தற்போது பகத் பாசில் பிறந்த நாள் முன்னிட்டு மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், வணக்கம் பகத் சார்!!! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்.

ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன்.

ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்.. என்று மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.

Related Post

இத்தனை பேருக்கு தான் அனுமதி.. லியோ விழா ரத்து செய்ததே நல்லது! – தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல்

Posted by - September 27, 2023 0
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது தற்போது விஜய் ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது. அரசியல் அழுத்தம் காரணம் இல்லை என தயாரிப்பு…

ஒரே கதையை 2 படமாக எடுத்து ரசிகர்களை குழப்பிய இயக்குனர்கள்.. என்ன கொடுமை பாஸ் இதெல்லாம்

Posted by - January 1, 2025 0
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த கதையை பின்பற்றி பல படங்கள் வருவதுண்டு. சில இயக்குனர்கள் வெற்றி பெற்ற படத்தின் நடிகர்களை வைத்து அதே…

இந்தியாவின் டாப் 10 நடிகர்கள்! எந்த ஹீரோ முதலிடம் பாருங்க.

Posted by - November 23, 2022 0
சினிமாவில் எப்போதும் நடிகர்கள் இடையே போட்டி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் தற்போது ஹிந்தி சினிமா ஹீரோக்கள் ஆதிக்கம் குறைந்து தற்போது தென்னிந்திய நடிகர்கள் தான்…

தயவு செஞ்சு யாரும் ‘கோட்’ அப்டேட் கேட்காதீங்க

Posted by - March 5, 2024 0
தளபதியின் கோட் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தயவு செஞ்சு யாரும் ‘கோட்’ அப்டேட் கேட்காதீங்க என அப்படத்தின் இயக்குநர் வெங்கட்…

தளபதி 69 அரசியல் படமா.? மேடையில் போட்டு உடைத்த எச்.வினோத், 200% இப்படி தான் இருக்கும்

Posted by - August 17, 2024 0
Thalapathy 69: விஜய்யின் அரசியல் பயணம் ஆரம்பித்துவிட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள கோட் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வருகிறது. அதை அடுத்து அவருடைய 69 ஆவது படத்தோடு சினிமாவிற்கு குட்பை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *