பராசக்தி ரூ.100 கோடி வசூல்.. வாயில வடை சுடாதீங்க..

94 0

பராசக்தி படம் முதல் நாளில் ரூ.27 கோடியும், 2ம் நாளில் மொத்தம் ரூ.51 கோடியும் வசூல் செய்ததாக பட நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்பின் ஒரு வாரம் வசூல் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “பராசக்தி” படம் ரூ.100 கோடி வசூலைப் பெற்றதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் அதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பொங்கலுக்கு வெளியான பராசக்தி

2026ம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி வெளியானது. ஜனவரி 10ம் தேதி வெளியான இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கிய நிலையில் டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார். இப்படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா முரளி, பிரித்வி ராஜன், சேத்தன், ராணா டகுபதி, பைசல் ஜோசப் என பலரும் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் 100வது படம் என்ற சிறப்பையும் பராசக்தி பெற்றிருந்தது.

இந்த நிலையில் பராசக்தி படம் முதலில் விஜய்யின் ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி ரிலீசாக இருந்த காரணத்தால் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. மாறாக சென்சார் சான்றிதழ் பிரச்னை காரணமாக ஜனநாயகன் வெளியாகவில்லை. இதனால் பொங்கல் பண்டிகைக்கு தனி படமாக முதலில் பராசக்தி வெளியானது.

நெகட்டிவ் விமர்சனம்

ஏற்கனவே விஜய் படம் வெளிவராமல் அரசியல் செய்யப்படுவதாக கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்கள், இதற்கு பராசக்தி படக்குழுவும் உடந்தை என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பராசக்தி படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட, முதல் நாளே இப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் காத்து வாங்கியது. இயக்குநர் சுதா கொங்காரா, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆகியோர் நேரடியாக விஜய் ரசிகர்களை சாடினர்.

எனினும் பராசக்தி படம் முதல் நாளில் ரூ.27 கோடியும், 2ம் நாளில் மொத்தம் ரூ.51 கோடியும் வசூல் சாதனை செய்ததாக பட நிறுவனம் தெரிவித்திருந்தது.

 

பராசக்தி ரூ.100 கோடி வசூல்

அதன்பிறகு பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக கடந்த ஒரு வாரம் வசூல் நிலவரம் அறிவிக்கப்படவில்லை. இப்படியான நிலையில் பராசக்தி படம் ரூ.100 கோடி வசூலை பெற்றதாக போஸ்டர் வெளியானது. அவ்வளவு தான்.. நெட்டிசன்கள் கமெண்டுகளை சிதற விட்டு கலாய்த்து வருகின்றனர். நல்லா உருட்டுங்கடா.. வாயில வடை சுடாதீங்க.. பச்சை பொய் பேசுறீங்க.. நேத்து தான் ரூ.80 கோடி வசூல்ன்னு படிச்சேன்.அதுக்குள்ள எப்படி ரூ.20 கோடி ஏறிருக்கும் என சகட்டுமேனிக்கு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே ஜனவரி 15ம் தேதிக்குப் பின் பராசக்தி படத்தின் வசூல் எகிறியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனின் கடந்த படங்களான அமரன், மதராஸியை காட்டிலும் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

 

Related Post

‘Fan Boy’ ஆக மாறிய விஜய்.. வைரலாகும் புகைப்படம்

Posted by - September 2, 2023 0
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து…

செம வசூல் வேட்டை நடத்தும் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம்… 5 நாள் வசூல் விவரம்

Posted by - November 19, 2025 0
காந்தா படம் இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் காந்தா. கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக…

‘காடுவெட்டி’ பட பெயர் சென்சாரில் தப்பியது எப்படி? – தயாரிப்பாளர் சோலை ஆறுமுகம் சொன்ன காரணம்

Posted by - March 7, 2024 0
காடுவெட்டி என்பது சரித்திரத்துடன் தொடர்புடைய பெயர் என்று வாதிட்டு, காடுவெட்டி பெயரை சென்சாரிடமிருந்து காத்துள்ளார் சோலை ஆறுமுகம். சோலை ஆறுமுகம் இயக்கத்தில், ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் காடுவெட்டி படம்…

அந்த காட்சியில் நடித்ததை நினைத்து இப்போதுவரை வேதனைப்படுகிறேன்!.. நடிகை சதா வெளிப்படை

Posted by - September 22, 2023 0
சதா தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா. இப்படத்தை தொடர்ந்து திருப்பதி,பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.…

‘கம்முனு கிட’ கண்ணம்மாவின் வசனம்….விசு வெற்றிகண்ட 5 படங்கள்..

Posted by - April 17, 2023 0
விசுவின் இயக்கத்தில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வகையிலேயே அமைந்திருக்கும். அதிலும் குடும்ப செண்டிமெண்ட் கதைகளை மையமாக வைத்து ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருப்பார். அப்படியாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *