பிராய்லர் கோழியில் ஹார்மோன் ஊசி செலுத்துவதை நிரூபித்தால் ரூ.25 லட்சம் பரிசு: பண்ணையாளர்கள்-வியாபாரிகள் அறிவிப்பு

418 0

திருவனந்தபுரம்:

பிராய்லர் கோழிகள் குறைந்த நாட்களில் அதிக இறைச்சியுடன் வளர்வதற்காக ஹார்மோன் ஊசி செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஊசி போட்டு வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை நாம் உண்ணுவதால் நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது. நாடு முழுவதும் நிலவி வரும் இந்த கருத்தால் பிராய்லர் கோழி விற்பனை அடிக்கடி பாதிக்கப்படுகிறது.கோழி பண்ணைகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க சுற்றுச்சூழல் அதிகாரிகள் குழு  விரைவில் ஆய்வு | A panel of environmental officials will soon inspect  poultry farms to issue ...

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்ற கருத்தை பிராய்லர் கோழி பண்ணை உரிமையாளர்கள் மறுத்து வருகிறார்கள். பிராய்லர் கோழியில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால், அதை உண்ணுவதன் மூலம் நமது உடலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த பிராய்லர் கோழி பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள், பிராய்லர் கோழிகள் ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்கப்படுகிறது என்பதை நிரூபித்தால், ரூ.25லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அசைவ பிரியர்கள் பிராய்லர் கோழி இறைச்சியை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் பிராய்லர் கோழி தொடர்பாக நாடு முழுவதும் தேவையற்ற தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பிராய்லர் கோழிகளில் வளர்ச்சி ஹார்மோன்கள் இருப்பதாக கூறுவது தவறானது. இதில் செரிவூட்டப்பட்ட தீவனம், நோய்த்தடுப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு போன்ற காரணிகளே பங்களிக்கின்றன என்று பாலக்காடு பறவை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் அதிகாரி ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Post

டாடா சியாரால EV வந்தா நல்லா இருக்கும்னு வெயிட் பண்றீங்களா.?

Posted by - February 14, 2026 0
புதிய டாடா சியரா EV, வலுவான தோற்றம், நீண்ட தூரம் பயணிக்கும் திறன் மற்றும் நம்பகமான பிராண் பெயரைக் கொண்ட மின்சார SUV-யைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு…

விளம்பர மோகம்; பம்மாத்து நாடகம்; இதுக்குகூடவா மனம் வரவிளம்பர மோகம்; பம்மாத்து நாடகம்; இதுக்குகூடவா மனம் வரவில்லை: பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின்வில்லை: பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின்

Posted by - February 1, 2025 0
எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?   எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம்…

தங்கம் விலை அதிர்ச்சிகர உச்சம்: பவுன் ரூ.97,000-ஐ கடந்தது!

Posted by - October 17, 2025 0
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் விலை ஒரு பவுன் ரூ.97,000-ஐ தாண்டி…

என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்…

Posted by - March 29, 2025 0
நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஊக்கத் தொகை கிடைக்கும் என்றால் நம்புவீர்களா.? யார் அப்படி கொடுப்பது என யேசிக்கிறீர்களா.? மத்திய அரசுதான். என்ன விவரம் தெரியுமா.? மத்திய…

இந்த பட்ஜெட் பிரதமர் மோடி எண்ணங்களுக்கு செயல் வடிவம் – முதல்வர் புகழாரம்

Posted by - February 1, 2025 0
விவசாயிகளுக்கான கிசான் கிரிடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3. இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தி கடனுதவியை அதிகரித்திருப்பது விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த உதவும் – முதல்வர் ரங்கசாமி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *