கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு: தக்காளி கிலோ ரூ.30 ஆக சரிவு

385 0

போரூர்:

தமிழகத்தில் கடந்த மாதம் தக்காளியின் விலை கிலோ ரூ.200 வரை உச்சத்தில் இருந்தது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை சரியத்தொடங்கி உள்ளது. கோயம்பேடு மார்கெட்டுக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை (13.12.2021) நிலவரம் :  குறைந்தது தக்காளி விலை

ஆனால் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து பாதியாக குறைந்ததால் கடந்த மாதத்தில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. அதிகபட்சமாக சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.200வரை விற்கப் பட்டது. இந்நிலையில் தற்போது கோயம்பேடு சந்தைக்கு தக்காளியின் வரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இன்று 45 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. தக்காளி வரத்து பழைய நிலைக்கு வந்து உள்ளதால் அதன் விலையும் வேகமாக குறைந்து வருகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை சரிந்து பழையநிலைக்கு திரும்புவதால் இல்லத்த ரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

Related Post

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் – புகைப்படங்கள்!

Posted by - January 27, 2023 0
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெற்றது. தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது… 91.55% பேர் தேர்ச்சி- இம்முறையும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

Posted by - May 10, 2024 0
தமிழ்நாட்டில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம்…

கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - May 31, 2025 0
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் பதட்டப்பட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் அனைவரும்…

மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம்

Posted by - February 20, 2023 0
மயில்சாமி மறைவு மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம் நடிகர் மயில்சாமி நேற்று உடல்நல குறைவு காரணமாக காலமானார். திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள்…

“இந்த முறை வேறு தொகுதி..” – உதயநிதி தொகுதி மாறுகிறாரா? 2026 தேர்தல் குறித்து கொடுத்த ஹின்ட்!

Posted by - January 10, 2025 0
திமுக ஆட்சியில் முதலமைச்சர் நிச்சயமாக எந்தவொரு குற்றவாளியையும் தப்பிக்கவிடமாட்டார் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200 கூட்டணி தொகுதிகளில் வெற்றிபெறும் என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *