லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்கு பின் நிலவின் தரையை தொட்டது ரோவர்

201 0

புதுடெல்லி:

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இதையடுத்து, விக்ரம் லேண்டர் தரையிறங்கியபின் இந்தத் திட்டத்தின் அடுத்த பணியான பிரக்யான் ரோவர் வெளியேற்றத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்களின் சீரிய முயற்சியால் லேண்டரின் வயிற்றுப் பகுதியில் இருந்த ரோவர் சில மணி நேரங்களில் வெளியேறியது. இது விஞ்ஞானிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இந்நிலையில், நிலவின் தரைப்பகுதியில் பிரக்யான் ரோவர் தடம் பதித்தது. ரோவர் அங்கேயே உருண்டோடி ஆய்வு பணிகளை தொடங்கி இருக்கிறது. 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ளும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Related Post

பயங்கரவாதிகளிடம் சிக்கி துடிதுடித்து மரணித்த மணிப்பூர் மாணவன், ”நீட்” மாணவி- உருக்கமான தகவல்கள்!

Posted by - September 27, 2023 0
இம்பால்: வடகிழக்கு இந்திய மாநிலங்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது மணிப்பூர் மாணவர் மற்றும் மாணவியின் படுகொலைகள். பள்ளி சிறுவர்களை கடத்திச் சென்று பயங்கரவாதிகள் சித்ரவதை செய்து…

’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!

Posted by - December 1, 2025 0
’சிபி ராதாகிருஷ்ணன் முதன்முறையாக மாநிலங்களவை சபாநாயகராக அவையை நடத்தவுள்ள நிலையில், தமிழ்நாடு சார்ந்த பிரச்னைகளை அவர் எப்படி கையாளப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது’ நாடாளுமன்ற குளிர்கால…

காளஹஸ்தியில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்

Posted by - February 20, 2023 0
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி கோவில்…

AI துறையில் பெருகும் வேலை வாய்ப்பு… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Posted by - December 14, 2024 0
இளைஞர்கள் மத்தியில் சேர்க்கை நுண்ணறிவு துறை அதிக வரவேற்பை பெற்று வருகிறது இப்போது AI இன்ஜினியரிங் துறையில் சிறந்த வேலைகள் எவை மற்றும் அதில் எவ்வளவு சம்பளம்…

என்னது UPIயில் பணம் செலுத்தினாலும் கட்டணமா? ஏப்ரல் 1 முதல்மாற்றம்

Posted by - March 29, 2023 0
இந்த கட்டணம் ஒருவருக்கொருவர் பணப்பரிவர்த்தனை செய்யும் போது வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2000 ரூபாய்க்கு மேலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கான UPI/Wallet கட்டணங்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *