புதுச்சேரி பல்கலைக்கழக மாணவியிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: ஆன்லைனில் நூதன மோசடி

276 0

புதுச்சேரி:

வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு சில மாதங்களாக பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் லாவண்யாவின் இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? காதல் பிரச்சனையா? தொழிலில் பிரச்சனையா? எதுவாக இருந்தாலும் நாங்கள் மாந்திரீக முறையில் தீர்த்து வைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது அவர் தனது காதலுடன் பிரச்சனை இருப்பதாக கூறினார்.கோவையில் பண ஆசையை தூண்டி ரூ. 300 கோடிவரை மோசடி - என்ன நடந்தது? - BBC News  தமிழ்
எதிர்முனையில் பேசியவர், நான் சொல்கிற சில விஷயங்களை செய்து, மாந்திரீக பூஜைக்கும் ஒத்துழைப்பு கொடுத்தால் உங்கள் காதலரை சேர்த்து வைக்கிறோம் என்று கூறினார். பின்னர் அந்த பெண்ணிடம் அவர் மாந்திரீக பொருட்கள் வாங்க வேண்டும், பல பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய லாவண்யா பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 84 ஆயிரத்து 340 அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இருப்பினும் தனது காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாவண்யாவிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலினுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்! : வானதி சீனிவாசன்

Posted by - April 10, 2024 0
‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் அனைத்து மதத்தினரின் நலன்களையும் பாதுகாப்பவர்கள். கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் 1500-க்கும் அதிகமான…

இதை கூறி தேர்தலை சந்தியுங்கள் பார்க்கலாம்.. இது எங்களின் சவாலாகும்

Posted by - January 31, 2025 0
கடந்த 1987ல் கள் இறக்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி…

சிவாஜி ராவ் டூ சூப்பர் ஸ்டார்.. தமிழகம் கொண்டாடும் ரஜினிகாந்த்.. பிறந்தநாள் ஸ்பெஷல்!

Posted by - December 12, 2022 0
Rajinikanth Birth Day: ரஜினிகாந்த் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழையும் அந்த முதல் காட்சி தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதின் திறவுகோலாகவும் அமைந்தது. 73 வது வயதில்…

காதலை கண்டித்ததால் ஆத்திரம்- தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய அக்காள்

Posted by - March 21, 2023 0
ஓசூர்: கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது.…

ஆவின் பால் பாக்கெட் கலர் வித்தியாசம்.. இவ்வளவு விஷயம் இருக்கா? பலருக்கும் இது தெரியாது!

Posted by - April 5, 2023 0
#Aavin Milk : ஆவின் பால்பாக்கெட்டுகள் பல வண்ணங்களில் கிடைக்கும். பச்சை பால், நீல பால் என நிறத்துக்கு ஏற்ப கடைகளில் கேட்டு வாங்கினாலும் ஒவ்வொரு வண்ணத்துக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *