அடிக்கடி முட்டை குழம்பு செய்வீங்களா.. அடுத்த முறை பாண்டிச்சேரி ஸ்டைல்-ல பண்ணுங்க.. செமயா இருக்கும்…

283 0

உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை குழம்பு செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முட்டை குழம்பை செய்வதாக இருந்தால், அதை பாண்டிச்சேரி ஸ்டைலில் செய்யுங்கள்.

இந்த பாண்டிச்சேரி ஸ்டைல் முட்டை குழம்பு சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பாண்டிச்சேரி ஸ்டைல் முட்டை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாண்டிச்சேரி ஸ்டைல் முட்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.அடிக்கடி முட்டை குழம்பு செய்வீங்களா.. அடுத்த முறை பாண்டிச்சேரி ஸ்டைல்-ல  பண்ணுங்க.. செமயா இருக்கும்... | Pondicherry Egg Curry Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு…

* மல்லி – 1 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 4

* கசகசா – 1 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 3 டீஸ்பூன்

பிற பொருட்கள்…

* தேங்காய் – 1/2 மூடி

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கிராம்பு – 2

* பட்டை – 2 இன்ச்

* வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1 இன்ச்

* பூண்டு – 6 பல்

* பெரிய தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – 1 1/2 டீஸ்பூன்

* வேக வைத்த முட்டை – 5-6

* எலுமிச்சை – 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்)

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் அரைமூடி தேங்காயை அரைத்து, கெட்டியாக தேங்காய் பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் மல்லி, பச்சை மிளகாய், கசகசா மற்றும் சோம்பு சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி, தக்காளியை நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின்பு அதில் சிறிது தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவை பார்த்து, குறைவான தீயில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* இறுதியாக அதில் மீதமுள்ள தேங்காய் பால், வேக வைத்துள்ள முட்டை மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து, கொத்தமல்லியைத் தூவினால், பாண்டிச்சேரி ஸ்டைல் முட்டை குழம்பு தயார்.

Related Post

நினைத்ததை சாதித்தோம் திமிரில் குணசேகரன், கடைசியில் ஷாக்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - October 6, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவியில் மட்டும் எந்த ஒரு சீரியல் எடுத்தாலும் திருமணம் என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. அதில் வில்லன்களால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதும், ஹீரோ-ஹீரோயின்…

அரசியல் களத்தில் சிவகார்த்திகேயன்..

Posted by - June 12, 2024 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி…

சப்பாத்திக்கு பன்னீரை இனி இப்படி செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted by - September 1, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் சைடு டிஷ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? எப்போதும் ஒரே…

அம்மாவையும் ஒழிக்க முடிவெடுக்கும் குணசேகரன்? எதிர்நீச்சல் 2 அதிர்ச்சி ப்ரோமோ

Posted by - December 8, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் இருவரும் கைதுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *