நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 3 ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பு

386 0

சென்னை:

நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முன்எச்சரிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை, தேனி, கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தனி அறைகள் அமைக்கப்பட்டு தனித்தனியே சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கேரளாவை மிரட்டும் உக்கிரமான நிபா வைரஸ்.. தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய  அரசு அவசர ஆலோசனை! | Nipah Virus threatening Kerala: Central govt sends 6  member panel - Tamil Oneindia
மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை நிபா வைரஸ் பாதிப்புடன் எவரேனும் அனுமதிக்கப்பட்டால் அவரிடம் இருந்து பிறருக்கு பரவாமல் தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்க அதிகாரிகள் கூறியதாவது:- ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் நோய்த் தொற்றுகளுக்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், உயர்சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் கொரோனா, பன்றிக் காய்ச்சல், காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது நிபா வைரஸ் தொற்று கேரளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கம் எதுவும் இல்லை. இதுவரை அந்த அறிகுறிகளுடன் எவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்கென சிறப்பு அறைகள் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உதவியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள், கவசங்களும் இருப்பில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Post

சவுமியா அன்புமணி வெற்றிக்காக உழைக்கும் மகள்கள்!

Posted by - April 10, 2024 0
தருமபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார். அவரது மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் அம்மாவுக்காக ஆதரவு திரட்டி வருகின்றனர். முதல் மகளான…

சென்னையில் இருந்து விலகி சென்றது மிச்சாங் புயல்

Posted by - December 5, 2023 0
சென்னை: மிச்சாங் புயல் சென்னை அருகே வந்து மழை, காற்றால் துவம்சம் செய்தது. பின்னர் சென்னையில் இருந்து விலகி ஆந்திராவுக்கு சென்றது. நெல்லூர்-காவாலி இடையே இன்று (செவ்வாய்க்கிழமை)…

கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்

Posted by - June 30, 2023 0
கடலூர்: கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பி.எச்.டி. பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில்…

“எத்தகைய வெட்கக்கேடு?” – விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

Posted by - March 20, 2026 0
தூத்துக்குடி: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பின்னணி தூத்துக்குடி மாவட்டம்…

உங்கள் BSNL 4G சிம் கார்டில் VoLTE சேவையை எவ்வாறு செயல்படுத்துவது? இதோ வழிமுறைகள்..

Posted by - December 3, 2024 0
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாகத் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். அதாவது 4ஜி சேவை, 5ஜி சோதனை, லைவ் டிவி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *