TAC TV விவகாரம்: “அன்று ஹாத்வே இன்று அரசு கேபிள்” – திமுக அரசு மீது BJP தலைவர் அண்ணாமலை சாடல்

392 0

திரு,அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும்

தமிழ்நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒளிபரப்பு சேவையை தொழிநுட்ப ரீதியாக நிறுத்தியதற்காக, அதனை எடுத்துநடத்தும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் இயக்குநரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக தி.மு.க அரசை விமர்சித்து `அன்று ஹாத்வே இன்று அரசு கேபிள்’ என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் அண்ணாமலை, “தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் இருபது லட்சத்துக்கும் அதிகமான, எளிய பொதுமக்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில், கடந்த இரண்டு நாள்களாக தடை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும். பெருமளவில் வாடிக்கையாளர்களை வைத்திருந்த ஹாத்வே கேபிள் நிறுவனத்தின் கேபிள் கம்பிகளை அறுத்தெறிந்தும், அதைச் சார்ந்திருந்த கேபிள் ஆப்ரேட்டர்களை அடியாட்களைக் கொண்டு மிரட்டியும், இந்த நிறுவனத்தை தமிழகத்தை விட்டே விரட்டி, கேபிள் தொழிலை தனது ஏகபோக உரிமையாக மாற்றிய தி.மு.க-வின் குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன்.

அண்ணாமலை அறிக்கை

தற்போது, அரசு கேபிள் நிறுவனத்தையும் முடக்கி, மீண்டும் கேபிள் தொழிலை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற முயற்சிப்பதும், அரசு கேபிள் ஒளிபரப்பில் தடைகளை ஏற்படுத்தி, அதன் மூலம் அவர்களுக்கு தி.மு.க அரசு உதவுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் 1996-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. 2001-ம் ஆண்டுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த ஒட்டுமொத்த கேபிள் இணைப்புகளில் 80 சதவிகிதம் சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திடம் சென்றது. 2001-2006 காலகட்டத்தில் மீண்டும் ஹாத்வே 60 சதவிகித இணைப்புகள் பெற்று முன்னுக்கு வந்தது. 2006-2008 காலகட்டத்தில் கோபாலபுர குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளால் சுமங்கலி கேபிள் நிறுவனம் முடங்கிக் கிடந்தது.

தமிழக அரசு கேபிள்

2008-க்கு பிறகு மீண்டும் தலைதூக்கிய சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு தி.மு.க அரசு உதவியதால் ஹாத்வே நிறுவனம் 2010-ல் தமிழகத்தில் இனியும் தொழில் செய்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ஒட்டுமொத்த வணிக செயல்பாடுகளை நிறுத்திவிட்டது. தொடர்ந்து சுமங்கலி கேபிள் விஷன் போன்ற, தங்கள் குடும்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, இதற்கு முன்னர் தனியார் நிறுவனங்களைப் பலிகொடுத்த தி.மு.க இப்போது அரசு நிறுவனத்தைப் பலிகொடுக்க நினைக்கிறது. திறனற்ற தி.மு.க அரசின் இந்த மக்கள் விரோத போக்கை தமிழக பா.ஜ.க வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்பதை அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

 

Related Post

என்னை எனக்கே புதிதாய் காட்டிய படம்.. ஓபனாக பேசிய நடிகர் ஜெயம் ரவி

Posted by - December 18, 2024 0
ஜெயம் ரவி ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி கலக்கிவரும் நடிகர் ரவி. முதல் படம் வெற்றி கொடுக்க ஜெயம் ரவி என்று தனது பெயரை…

ஆளுநருக்கு நோ சொன்ன அஜித்குமார்.. இந்த விளையாட்டு எல்லாம் விஜய்யோடு நிறுத்திக்கங்க பாஸ்!

Posted by - February 15, 2025 0
என்னதான் வெளி உலகத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என அஜித் காட்டிக் கொண்டாலும் நாட்டு நடப்புகளை அப்டேட்டில் வைத்திருக்கிறார் போல. அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது.…

ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

Posted by - February 18, 2025 0
ஆசிரியர் பணி நியமனத்திற்கு இனி ”காவல்துறை சரிபார்ப்பு சான்று” கட்டாயமாக்கப்படும் என, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்…

அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! – கதறும் பாஜக

Posted by - December 13, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற அதிமுக – பாஜக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க காய் நகர்த்தப்பட்டு வருகிறது. அதே நேரம் ஓபிஎஸ் மற்றும் டிடிவியை…

திட்டமிட்ட தேதியில் முதுகலை ஆசிரியர் தேர்வு? டிஆர்பி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - October 7, 2025 0
TN TRB Hall Ticket 2025 தேர்வர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டு குறித்த குறைகள் இருப்பின் அதைச் சரிசெய்யலாம். அதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *