கும்பகோணத்தில்: தாயை 40 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த பிள்ளைகள்

189 0

மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். தனக்கு 80 வயதை எட்டி விட்டதால் தனது இறுதி காலத்திலாவது தன் பிள்ளைகளை காண வேண்டும் என மாரியம்மாள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

 

கூடலூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 80). இவருக்கு 5 குழந்தைகள் இருந்தனர். இதில் 2 பேர் இறந்து விட்டனர். தற்போது 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மாள் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து தேடி வந்தனர். மாரியம்மாள் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்பதால் பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் மற்றும் திருவிழாக்களிலும் அவரது மகன்கள் தேடி வந்தனர். இருந்தபோதும் அவர் எங்கே உள்ளார்? என்ற விபரமே தெரியவில்லை. இதனால் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். கேரள மாநிலம் தொடுபுழா பகுதிக்கு வழி தவறிச்சென்ற மாரியம்மாள் அங்கிருந்து தனது ஊருக்கு எப்படி செல்வது என தெரியாமல் தவித்து வந்த நிலையில் அங்குள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலமானார். அங்கிருந்த ஏராளமான ஆதரவற்ற முதியவர்களை பார்த்ததும் அதன் பிறகு ஊருக்கு செல்ல மனமில்லாமல் அங்கேயே தங்கி விட்டார். தனக்கு 80 வயதை எட்டி விட்டதால் தனது இறுதி காலத்திலாவது தன் பிள்ளைகளை காண வேண்டும் என மாரியம்மாள் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு மாரியம்மாள் குறித்த விபரங்களை தெரிவித்தனர். பின்னர் மாரியம்மாளின் மகன்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த அவர்கள் கேரள மாநிலம் தொடுபுழா ஊராட்சிக்கு சென்றனர். அவர்களை அடையாளம் கண்ட மாரியம்மாள் ஆனந்த கண்ணீர் விட்டார். பின்னர் இத்தனை வருடம் தனக்கு அடைக்கலம் தந்த ஆதரவற்றோர் நிர்வாகிகளிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து விடைபெற்று சென்றார். டி.எஸ்.பி. மது பாபு, முதியோர் இல்ல கண்காணிப்பாளர் செபாஸ்டின் ஆகியோர் முறைப்படி அவரை பிள்ளைகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மாரியம்மாள் தெரிவிக்கையில், இத்தனை வருடம் எனது பிள்ளைகள் குறித்து நினைவு இல்லாமல் இருந்தேன். எனது இறுதி காலத்தில் எனது பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என தோன்றியது. இதற்கு உதவி செய்த காப்பக நிர்வாகிகளுக்கு நன்றி என்றார்.

Related Post

#BreakingNews‌ | காவலர் – நடத்துநர் சமாதானம்

Posted by - May 25, 2024 0
நாங்குநேரியில் காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இருவரும் சமாதானம்! #Tirunelveli #Nanguneri #Police #Conductor #TNpolice | #Transportdepartment | #Trafficpolice…

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - May 22, 2024 0
 தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில்…

டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

Posted by - November 27, 2025 0
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும்…

கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! – தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் – என்ன விஷயம் தெரியுமா.?

Posted by - June 17, 2025 0
2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தேமுதிக ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான் கூட்டணிக்கு 40 என்ற புதிய மந்திரம். அது என்ன…

10% காவல் அதிகாரிகளை தவிர அனைவருமே போதை பொருள் கடத்தலுக்கு உடந்தை – பகீர் கிளப்பிய டாக்டர் ராமதாஸ்..!!

Posted by - September 20, 2024 0
போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற செய்தி தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவிதம் தவிர அனைவரும் உடந்தை என பாட்டாளி மக்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *