பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். திருநின்றவூர் இ.பி. காலனியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியை தாளாளர் மகன் வினோத் நிர்வாகித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகி வினோத், பிளஸ்-2 மாணவிகளிடம் பாடம் சம்பந்தமாக கவுன்சிலிங் இருப்பதாக தனியாக அழைத்து பேசி வந்ததாக தெரிகிறது. அப்போது அவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. கடந்த வாரம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு நிர்வாகி வினோத் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி மாணவி தோழிகளிடம் கூறியபோது இதே போல் அவர் மேலும் பல மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து இருப்பது தெரிந்தது. , இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் பள்ளி நிர்வாகி வினோத்தின் செயல் குறித்து தங்களது பெற்றோருக்கு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று காலை பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுக்கு எதிராக நிர்வாகி வினோத்தின் செயல்பாட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் பள்ளி தாளாளர் ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் மாணவிகளின் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் பள்ளி அருகே சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்ததும் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற மாணவிகளின் பெற்றோரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி அவர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். . இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, “பள்ளி நிர்வாகி வினோத் பல மாணவிகளை தனியாக அழைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து இருப்பதாக” சரமாரியாக குற்றம்சாட்டினர். பாலியல் குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகி வினோத் பள்ளியில் இல்லை. அவர் வெளியூர் சென்று இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள். இச்சம்பவத்தில் திருநின்றவூர் பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளன
Related Post
சட்டென்று மாறிய வானிலை… கொட்டித் தீர்த்த கனமழை… இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா?
சென்னை மற்றும் புறநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம்…
முக்கிய ரெயில் நிலையங்களில் ‘கியூஆர்கோடு’ ‘யு.பி.ஐ. செயலி’ மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி
சென்னை: நவீன தகவல் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக அனைத்து தொழில் சார்ந்த நடவடிக்கைகளும் வங்கியின் மூலமே பணபரிமாற்றம் செய்யப்படுகிறது. கையில் ரொக்கமாக செலுத்துவதற்கு பதிலாக ‘கூகுள்…
சிபிஎஸ்இ பள்ளிகள் கையெழுத்து கேட்கும்; பெற்றோர் போடாதீங்க! எச்சரிக்கும் அன்பில் மகேஸ்
சிபிஎஸ்இ பள்ளிகளின் ஃபெயில் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிபிஎஸ்இ 5ஆம்…
“ராகுல் எம்.பி பதவி பறிப்பை திருமாவளவன் நினைவில் கொள்ள வேண்டும்…”- பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி..!
அரசியல் கட்சித் தலைவர் எப்படி பேசக் கூடாது என்பதற்கு முன் உதாரணமாக திருமாவளவன் இருப்பதாக பாமக வழக்கறிஞர் பாலு விமர்சனம். நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம், சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிட…
நடைபயிற்சி சென்ற பெண்ணை கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்
நடைப்பயிற்சி சென்ற பெண் பேராசிரியரை தாக்கி, அவரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள…
Categories
- MEMES (12)
- அரசியல் (184)
- இந்தியா (468)
- உலகம் (173)
- சினிமா (812)
- தமிழ்நாடு (1,085)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (255)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (84)
Recent Posts
- ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?

- 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

- நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

- “தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

- திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
