சென்னை:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி இருக்கும் பிரதீப் ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் போட்டியாளராக இருக்கும்போது அவருடைய கன்னத்தில் அறைந்து இருந்தார்.
இந்த நிலையில் எதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் தான் வந்து கவினை அறைந்தேன் என்பது பற்றி முதல் முறையாக விசித்திராவிடம் பிரதீப் பேச இருக்கிறார்.
இந்த நிலையில் பிரதீம் சொன்ன காரணத்தை கேட்டு ரசிகர்கள் விலாசி எடுத்து வருகின்றனர். இப்படியும் கூடவா பிளான் போடுவார்கள் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அதிகமான இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்ட போதிலும் ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் இந்த சீசனில் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் மட்டும் தான் கண்டென்ட் கொடுக்கிறோம் என்று கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு ஒருவரை மாற்றி ஒருவர் உருவ கேலி செய்து கொண்டும் கெட்ட வார்த்தைகளில் பேசிக் கொண்டும், முரட்டுத்தனமாகவும் விளையாடி வருகின்றனர்.
அதிலும் ஆரம்பத்தில் இந்த சீசனில் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது பிரதீப் தான். எந்த இடத்திலும் நியாயமாக விளையாடுகிறார். ரூல்ஸ்ஸை பிரேக் செய்யாமல் விளையாடுகிறார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியை பெற்றி முழுமையாக தெரிந்துகொண்டு எல்லோருக்கும் அறிவுரையும் கூறுகிறார் என்பது பலருடைய கருத்தாக இருந்தது.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே தான்தான் இந்த வார தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காக சக போட்டியாளர்களிடம் இவர் எடுத்து வைத்த வாக்குவாதம் மற்றும் அவர்களுடைய மனநிலையை அப்படியே சிதறவிட்டது போன்றவை ரசிகர்களை கவர்ந்திருந்தது. அது மட்டும் அல்லாமல் விஜய் வர்மாவோடு டாஸ்க்கில் ஏற்பட்ட சண்டையின் போதும் கூட விஜய் வர்மா தன்னை தாக்கிய போதும் நேர்மையாக எடுத்துக்கொண்டு விளையாட்டு என்றால் அடி பட தானே செய்யும் என்பதை பற்றி பெருந்தன்மையாக பேசி இருந்தார்.
இப்படியாக ரசிகர்களின் மத்தியில் அவர் நல்ல ஒரு இடத்தில் இருந்த நிலையில் சமீபத்தில் இவருடைய விளையாட்டு ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. அதிலும் வைல்ட் கார்ட்டாக போட்டியாளர்கள் வந்ததும் அவர்களை பழிவாங்க கூட்டு சேர்த்து பிளான் போட்டது, அதுபோல கூல் சுரேஷின் அம்மாவை பற்றி தவறாக பேசியது, அக்ஷயாவை பிராவோவை காதலிக்க சொன்னது என பல விஷயங்கள் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஏற்கனவே தான் மூன்றாவது சீசனில் வந்து கவினை எதற்கு அடித்தேன் என்பது பற்றி விசித்திராவிடம் பேசி இருக்கிறார். அப்போது விசித்ரா ஏன்டா அப்படி பண்ணா என்று கேட்க, என் மேல நெகட்டிவிட்டி வாங்க அவர் மேல இருக்கிற நெகட்டிவிட்டியை போக்க தான்.
மக்கள் என்னை பத்தி பேசுவாங்க என்ற ஸ்டேடர்ஜி தான் என்று சொல்கிறார். அதற்கு விசித்திரா எப்படி ஒர்க் ஆகும் ஸ்டான்டஜி என்று கேட்க, என்னதான எல்லாரும் திட்டுவாங்க. அவன் மேல அந்த டைம்ல காதல் என்கிற ஒரு நெகட்டிவிட்டி இருந்தது. அதை மாத்துறதுக்காக தான் நான் அப்படி பண்ணுனேன் என்று சொல்ல, அதற்கு விசித்திரா கன்னத்தில் அடிச்சா அத வாங்குற பெர்சனுக்கு ஹார்ட் ஆகுமில்ல என்று கேட்க,
அதற்கு அது அவனுக்கு தெரியும். அதனால் தான் நான் அப்படி பண்ணினேன் என்று சொல்கிறார். அதை தொடர்ந்து விசித்திரா அடிக்க கூடாது, அது தப்பு. அவனோட பாயிண்ட்ல இருந்து நீ திங்க் பண்ணி பாரு என்று அட்வைஸ் கொடுக்கிறார். இந்த நிலையில் பிரதீப் சொன்ன வார்த்தையை கேட்டு பற்றி அதிகமான ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.