கொளுத்தும் கோடை! – ஏசி விற்பனை உயர்வு…!

215 0

கோடை வெயில் கொளுத்தும் நிலையில், மக்கள் தங்கள் இல்லங்களில் மின்விசிறி, ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. மதிய நேரத்தில் மட்டுமில்லாமல் இரவு நேரங்களிலும் வீட்டின் உள்ளே அனல் வீசுவதாக தெரிவிக்கிறார்கள். காலையில் வீசும் வெப்பக்காற்று வீட்டு மேற்கூரைகளில் உள்வாங்கப்பட்டு இரவில் உஷ்ணமாக உள் இறங்குவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எல் நினோ வருடம் என்பதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. வீட்டுக்கு குறைந்தது 3 மின்விசிறிகளாவது இருக்கிறது. எனினும், வெயிலை சமாளிக்க முடியாத காரணத்தால் AC-யை நாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இந்த மாதம் சந்தைகளில் ஏசியின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர் விற்பனையாளர்கள். விற்பனை அதிகரித்தாலும் விலையில் மாற்றமில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அதை சமாளிக்க குளிரூட்டும் இயந்திரங்களின் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

மூக்கிரட்டை இலை.. சிறுநீரக நோய்களை விரட்டியடிக்கும் மூலிகை நண்பன்.. அருமையான மூக்கிரட்டை கீரை சூப்

Posted by - December 11, 2023 0
சென்னை: சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காக்கக்கூடியது மூக்கிரட்டை கீரைகள்.. இந்த கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன? சத்தான மூக்கிரட்டை ரசம் எப்படி செய்வது தெரியுமா?மூக்கிரட்டையை, மூக்கரட்டை கீரை என்பார்கள்..…

மின் கட்டண உயர்வு: அண்ணாமலை கண்டனம்!

Posted by - July 16, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி,…

ஐந்து உறுதிமொழிகள்.. தவெக கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தல்

Posted by - February 19, 2024 0
தமிழக வெற்றி கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய் கட்சியினருக்கான ஐந்து உறுதிமொழிகளை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் கடந்த…

அதிகரிக்கும் கொரோனா: சென்னையில் தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம்

Posted by - April 6, 2023 0
சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.…

“தமிழகத்தில் இந்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்” – அலெர்ட் செய்த வானிலை மையம் – எங்கெல்லாம் தெரியுமா?

Posted by - April 6, 2024 0
சென்னை மற்று புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழக சமவெளிப் பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *