மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை: கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ந் தேதி குக்கர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக் (வயது 22) என்பது தெரியவந்தது. குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்த ஷாரிக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் போலீசார் மைசூரில் உள்ள ஷாரிக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு டைரி சிக்கியது. அதில் தீவிரவாதி ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் ஆகிய நகரங்களுக்கு வந்து சென்ற விவரம் இருந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நவீன சாதனங்கள் உதவியுடன், ஷாரிக் செல்போன் நம்பரை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இதில் அவர் மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நவம்பர் முதல் வாரம் 2 நாட்கள் தங்கி இருந்தது தெரியவந்தது. ஷாரிக் மதுரைக்கு ஏன் வந்தார்? அவர் 2 நாட்கள் தங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது தொடர்பாக விசாரணை நடத்த மங்களூரு தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நிரஞ்சன்குமார் தலைமையில் 10 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று மதியம் மதுரைக்கு வந்தனர். அவர்கள் மதுரை நேதாஜி ரோடு, டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு 30-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன.தனிப்படை போலீசார் 2 குழுக்களாக பிரிந்து, மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதி மற்றும் உணவகங்களில் அதிரடி விசாரணை நடத்தினார்கள். சூர்யா நகரில் உள்ள ஓட்டல்களிலும் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ஓட்டல்களில் உள்ள வருகை பதிவேடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது சந்தேகத்துக்கிடமான சிலரின் ஆதார் பதிவுகள் உண்மைதானா? என்று அதிநவீன கருவிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார் ஓட்டலுக்கு அருகில் உள்ள ரெஸ்டாரண்டுகளிலும் விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். ஓட்டல் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் டிரைவர்களிடமும் சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தினர்.
மதுரையில் தனிப்படை போலீசார் 4 மணி நேரம் அதிரடி விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் புறப்பட்டு சென்றனர். மதுரையில் போலீசாரின் விசாரணையின்போது லோக்கல் போலீசார் மட்டுமின்றி மத்திய புலனாய்வு அதிகாரிகளும் உடனிருந்தனர். ஷாரிக் ஏற்கனவே போலி ஆவணங்கள் மூலம் பிரேம்ராஜ் என்ற பெயரில் ஆதார் கார்டு பெற்றுள்ளார். அவற்றை பயன்படுத்தி மதுரை ஓட்டலில் தங்கி இருந்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். எனவே அவன் எந்த நோக்கத்துக்காக மதுரை வந்து இருந்தான்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.மேலும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் மதுரை ஓட்டலில் தங்கி இருந்த ஷாரிக்கை நேரில் சந்தித்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் தனிப்படை போலீசார் மதுரை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதற்கிடையே ஷாரிக் ஓட்டலில் இருந்து எந்ததெந்த இடங்களுக்கு சென்றார்? அவரை யாரெல்லாம் சந்தித்தனர்? என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கர்நாடக தனிப்படை போலீசார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ள நேதாஜி ரோட்டில் உள்ள ஓட்டல் மற்றும் உணவகங்களில் அதிரடி விசாரணை நடத்திய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Post
பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…
பிக் பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழையும் மியா கலிஃபா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஹிந்தி, தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி…
அசாமில் மார்க்கெட்டில் தீவிபத்து- 150 கடைகள் சேதம்
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரின் மையப் பகுதியில் உள்ள சவுக் பஜார் மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் நெரிசலாக இருந்ததால்…
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு செந்தில் பாலாஜி உருக்கமான கடிதம் …
சிறையில் இருந்துகொண்டே இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடித்து வந்த செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக…
வழக்கறிஞர்களிடமிருந்து டிப்ஸ் பெற ஆடையில் QR code! – சஸ்பெண்ட் செய்து நீதிமன்றம் நடவடிக்கை.
வழக்கறிஞர்களிடமிருந்து `பேடிஎம்’ மூலம் டிப்ஸ் பெற்ற நீதிபதியின் டவாலியை பணியிடை நீக்கம் செய்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு. வழக்கறிஞர்களிடமிருந்து `பேடிஎம்’ மூலம் அன்பளிப்பாகப் பணம் பெற்ற நீதிபதியின்…
Categories
- MEMES (12)
- அரசியல் (184)
- இந்தியா (468)
- உலகம் (173)
- சினிமா (812)
- தமிழ்நாடு (1,085)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (258)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- விஜய் உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னாரா? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன?

- ஆரம்பமே அதிர்ச்சி.. விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. தேர்தல் பரப்புரை நடக்குமா?

- பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்: தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து

- முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

- ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?
