விஷால்
மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு பெரும் பலத்துடனும் உற்சாகத்துடனும் இருந்து வருகிறார் நடிகர் விஷால். இவர் அடுத்து மாஸ் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று சென்னையை புயல் புரட்டி போட்டது என்று தான் சொல்ல வேண்டும், வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ய, அரசு தன்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்காக உழைத்தனர்.
ஆனால், விஷால் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு, எம் எல் ஏ-க்கள் வெளியே வாங்க, மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என சொல்ல, பலரும் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இதற்கு சென்னை மேயர் ப்ரியாவும் ‘அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள்.
அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும், அரசு நிறைவேற்றித் தரும்!’ என பதிலடி கொடுத்துள்ளார்.