பெண்களுக்கு இலவச கல்வி..20 லட்சம் புதிய வேலை.. பொது சிவில் சட்டம் – குஜாரத்தில் பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதி

405 0

குஜராத் மாநில தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட பாஜக பெண்களுக்கு இலவச கல்வி, மாநிலத்தில் பொது சிவில் சட்டம் போன்றவற்றை வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது.தேர்தல் வாக்குறுதி வெளியிட்ட பாஜக

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநிலத்தை ஆளும் பாஜக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அங்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது முதலமைச்சராக அக்கட்சியின் மூத்த தலைவர் பூபேந்தர் பாடேல் உள்ளார். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நவம்பர் 3ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, குஜராத்தில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்கு பதிவு டிசம்பர் 1ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத். எனவே, அங்கு சிறப்பான வெற்றியை பெற வேண்டும் என்பதை பாஜக தனது கவுரவ பிரச்னையாக பார்க்கிறது. எனவே, முன்னணி பாஜக தலைவர்கள் அனைவரும் தொடர்ந்து தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அம்மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதி பட்டியலை இன்று வெளியிட்டார். அதில், பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு தரமான இலவச கல்வி திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. கேஜி வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் வழங்கி மாநிலத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது.அதேபோல், பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் எனவும், நாட்டில் அச்சுறுத்தும் சக்திகள், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஆகியவற்றை அடையாளம் காண தனிக்குழு ஒன்றை அமைப்போம் என்று வாக்குறுதியில் கூறியுள்ளது. மேலும் மாநிலத்தில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

Related Post

அதிகரித்த டிமாண்ட்.. எங்களுக்கு இத்தனை சீட்டு வேணும்.. திமுக-விடம் திருமா கேட்பது இதுதான்!

Posted by - July 17, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைக்க திருமாவளவன் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டு அரசியல் களம் நாளுக்கு நாள்…

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.200-க்கு விற்பனை: சென்னையிலும் விலை உயர வாய்ப்பு

Posted by - July 29, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து முதல் ரக தக்காளிகள் வடமாநிலங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி…

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

Posted by - January 2, 2024 0
திருச்சி: திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர்…

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Posted by - March 22, 2024 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய…

நித்தியானந்தவின் புதிய திட்டம்

Posted by - February 16, 2023 0
புதுடெல்லி: சாமியார் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *