அதிகரித்த டிமாண்ட்.. எங்களுக்கு இத்தனை சீட்டு வேணும்.. திமுக-விடம் திருமா கேட்பது இதுதான்!

185 0

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைக்க திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக ஆட்சிகளுடன் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் களத்தில் இருப்பதால் விறுவிறுப்பு உண்டாகியுள்ளது.

திருமாவளவனின் முக்கியத்துவம்:

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் யார் பலமான கூட்டணியை அமைக்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலில் விசிக-வின் செல்வாக்கும், வாக்கு சதவீதமும் அதிகரித்து வருகிறது.

புதியதாக கட்சி தொடங்கி தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள நடிகர் விஜய், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கே கூட்டணி அழைப்பு விடுப்பார் என்று கருதப்பட்டது. ஆனால், அவர் வெளிப்படையாக கூட்டணி அறிவிப்பு விடுத்தது விசிக தலைவர் திருமாவளவனுக்கு மட்டுமே ஆகும்.

அதிக தொகுதிகள்:

தற்போதைய திமுக கூட்டணியிலும் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் என விசிக-வை காட்டிலும் மூத்த கட்சிகள் இருந்தாலும் திருமாவளவனின் செல்வாக்கு மற்ற கட்சித் தலைவர்களை காட்டிலும் அதிளவே உள்ளது. மேலும், கூட்டணிக்குள் பாமக வந்தால் வெளியேறிவிடும் என்றும் திருமாவளவன் உறுதியாக உள்ளார்.

பாமக தற்போது ராமதாஸ் அணி, அன்புமணி என்று பிளவுபட்டுள்ள நிலையில், அவர்கள் இதே நிலையில் தேர்தலைச் சந்தித்தால் அவர்கள் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு மிகப்பெரிய பலவீனம் ஆகும். தன்னுடைய முக்கியத்துவம் அதிகரித்துள்ள வரும் சட்டமன்ற தேர்தலில், கூட்டணியில் அதிக தொகுதிகளை ஒதுக்க திமுக-வை வலியுறுத்த திருமாவளவன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இரட்டை இலக்கம்:

குறிப்பாக, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-விடம் இரட்டை இலக்கத்தில் சீட்டுகள் ஒதுக்க வலியுறுத்த அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் திருமாவளவனின் கோரிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்பாரா? அல்லது கடந்த தேர்தலைப் போல ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்குவாரா? அல்லது அரசியல் சதுரங்கத்தில் திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியேறுவாரா? என்பது அடுத்தடுத்த மாதங்களில் தெரிய வரும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்த விசிக-விற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு 4 இடங்களில் விசிக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் அரசியல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன் திமுக கூட்டணிக்கு விழும் 4 வாக்குகளில் ஒரு வாக்கு விசிக-வின் வாக்கு என்றும், திராவிட மாடல் அரசு அமைய உறுதுணையாக இருப்போம் என்றும் பேசியுள்ளார். இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் விசிக-விற்கு வாக்கு வங்கி அதிகளவில் உள்ள வட தமிழகத்தில் அவர் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை விடுப்பார் என்று கருதப்படுகிறது.

Related Post

ஐயாவின் புது ரூட்டு!மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்!

Posted by - July 12, 2025 0
அன்புமணியுடனான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்திமதியை தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான கட்சியாக பாமக…

பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.?

Posted by - November 13, 2025 0
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு 5ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது சாத்தியமா.?…

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா ? விசாரணை நடத்த இ.பி.எஸ் வலியுறுத்தல்..!!

Posted by - May 8, 2024 0
சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா இல்லையா என்பதை நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி…

‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!

Posted by - July 31, 2025 0
’விஜயை வைத்து புதுச்சேரியில் முதல்வர் ஆவதுதான் புஸ்ஸி ஆனந்தின் நீண்ட நாள் திட்டம் என்பதை விஜய் மெல்ல, மெல்ல உணரத் தொடங்கிவிட்டார்’தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி…

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி… இணைந்தது ஏன் என்றும் விளக்கம்

Posted by - February 24, 2024 0
டெல்லியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்த விஜயதரணி பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *