மாவட்ட நீதிபதியிடம் பதில் அளித்து விட்டு தற்போது தெரியாது என்றால் என்ன? நீதிமன்றம் விளையாட்டு மைதானமா? – நீதிபதி கேள்வி
கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று ஆஜரான சுவாதி மீண்டும் பிறழ்சாட்சியம் அளித்ததால், அவர் உண்மையை ஒத்துக்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி, கடந்த 2015-ம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பான விசாரணையின் போது, நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.அதில் நீதிபதிகள் காட்டிய வீடியோவில் இருப்பது தான் இல்லை என தெரிவித்தார். மேலும் கோகுல்ராஜ் உறவினருடன் செல்போனில் பேசிய ஆடியோவை காட்டி கேட்டபோதும் அது தனது குரல் இல்லை என மறுத்துள்ளார். ஏற்கனவே 2018ஆம் ஆண்டு பிறழ்சாட்சியம் அளித்த நிலையில் மீண்டும் பிறழ்சாட்சியம் அளித்துள்ளார் சுவாதி.
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி, “நீங்கள் பொய் சொன்னால் சிறைக்கு செல்ல நேரிடும். இந்த வழக்கு மிகவும் முக்கியமானது.
நீதிமன்றத்திற்கு, நீதிபதிகளுக்கு ஒன்றுமே தெரியாது என நினைக்கிறீர்களா? கடைசியில் சத்தியம் ஜெயிக்கும். உங்களை பார்த்தே உங்களுக்கு தெரியாது என்றால் என்ன செய்வது?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய். சாதி, மதங்களை கடந்து செல்ல வேண்டும் நீதிபதிகள். மாவட்ட நீதிபதியிடம் பதில் அளித்து விட்டு தற்போது தெரியாது என்றால் என்ன? நீதிமன்றம் விளையாட்டு மைதானமா?” என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, “உண்மையை சொல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குகிறோம். உங்கள் மனசாட்சியே உங்களை சுடும். உங்களுக்கு ஏதாவது அழுத்தம் இருந்தால் கூறலாம்.” என தெரிவித்தார்.
சுவாதிக்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
Related Post
தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியதுதான் அதிமுக அரசாங்கம் – இபிஎஸ்
தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியது தான் அதிமுக அரசாங்கம் என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக…
புதுச்சேரி, தமிழகம் முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்: சிறப்பு தொழுகை, தியாக உணர்வுடன் இஸ்லாமியர்கள்
பக்ரீத் பண்டிகையொட்டி, முஸ்லிம்கள் புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி பகுதி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு…
கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்
கடலூர்: கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பி.எச்.டி. பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில்…
கோவை பீளமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்றது யார்?- 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை
கோவை: கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜிநகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவருக்கு ஜெகதீஷ்வரி (40) என்ற மனைவியும், கார்த்திகா(16) என்ற…
அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட நாளை துக்க நாளாக அனுசரிப்போம்! – ஆளுநர் ஆர்.என்.ரவி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975ஆம் ஆண்டு இதே நாளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்தாக கூறியுள்ளார். அரசியலமைப்பை தூக்கியெறிந்து, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கிய…
Categories
- MEMES (12)
- அரசியல் (184)
- இந்தியா (468)
- உலகம் (173)
- சினிமா (812)
- தமிழ்நாடு (1,085)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (255)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (84)
Recent Posts
- ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?

- 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

- நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

- “தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

- திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
