தூதுவளை.. அத்துடன் வேப்பிலை.. பற்களை பாதுகாக்கும் ஆச்சரிய இலைகள்.. ஈறுகளை பாதுகாக்கும் துளசியிலை

221 0

சென்னை:

பற்களை பாதுகாப்பதில் உணவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.. அந்தவகையில், சிலவகை இலைகளின் முக்கியத்துவத்தை இங்கு பார்க்கலாம்.

பொதுவாக, பற்களின் நிறம், ஈறுகளின் நிறத்தை வைத்தே, ஒருவரின் வாய் ஆரோக்கியம் அறியப்படுகிறது.. ஆரோக்கியமான ஈறுகள் என்றால், இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.. ரோஸ் கலரில் ஈறுகள் இருந்தாலே, அவைகள் பலம்மிக்க உறுதியான ஈறுகள் என்று அர்த்தம்.
தூதுவளை.. அத்துடன் வேப்பிலை.. பற்களை பாதுகாக்கும் ஆச்சரிய இலைகள்.. ஈறுகளை  பாதுகாக்கும் துளசியிலை | Do you know Excellent benefits of Thuthuvalai  Leaves and What are the ...
பற்கள்:
அதேபோல, பற்களில் கறை படிவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல் சரியாக துலக்காவிட்டாலும், அல்லது சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்கினாலும், கறைகள் ஏற்பட்டுவிடும்… இந்த கறை படிய துவங்கும்போதே, இதை வீட்டு மருத்துவத்திலேயே சரிசெய்யலாம். குறிப்பாக சில இலைகளை வைத்தே, வெண்மையான மற்றும் ஆரோக்கியமான பற்களை பெறலாம்.
பற்களின் கறைகளை நீக்க உதவும் கொய்யா இலை, பல்கூச்சத்தை போக்கவும் உதவும். அதனால், கொய்யா இலைகளை மென்று வரலாம்.கொய்யா இலைகள் ஐந்து எடுத்து நன்றாக கழுவி பிறகு 1 முதல் 2 நிமிடங்கள் பற்களில் படும்படி மென்று உமிழ்ந்து வரலாம்.
துளசி இலைகள்:
துளசி இலைகளையும் பற்கள் ஆரோக்கியத்துக்கு பயன்படுத்தலாம். துளசியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.. இந்த இலையிலிருந்து சாறு எடுத்து, வாய் கழுவலாம்.. அல்லது இலைகளை மென்று சாப்பிட்டாலே போதும், பற்களில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் பறந்துவிடும்.. வாய் துர்நாற்றமும் நீங்கிவிடும். வேப்பிலைகள் 4 போதும், மஞ்சள் பற்களே காணாமல் போய்விடும்.. இந்த இலையில், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளதால், பற்களில் தேங்கி கிடக்கும் பாக்டீரியாக்களை அழித்து பற்களை வெண்மை நிறமாக்கும்.. அதனால்தான் பெரும்பாலான டூத் பேஸ்ட்களில், வேப்பிலை சேர்க்கப்படுகிறது..

நெல்லிக்காய் இலைகள், கொய்யா இலைகள், வேப்பிலைகள் இப்படி ஏதாவது ஒரு இலைகளை தண்ணீரில் ஊறவைத்து, அதில் வாய் கொப்பளித்து வந்தால், பற்கள், ஈறுகள் பலப்படும்..

தூதுவளை:

அதேபோல, தூதுவளையின் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவையாகும்.. இந்த இலையில் நிறைய கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், எலும்பையும், பற்களையும் பலப்படுத்துகிறது.. இதனால் பற்களின் ஆரோக்கியம் அதிகமாகிறது. வாரம் 2 முறையாவது தூதுவளையை உணவில் சேர்த்து கொண்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்துவிடும்.

 

Related Post

`திருட்டுப்போன பைக்கை ஓட்டி வந்த போலீஸ்’ – தஞ்சாவூர் டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்த விவசாயி

Posted by - December 2, 2022 0
“திருட்டுப்போன பைக்கை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் ஒருவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது. போலீஸ் என்பதால் பயந்துபோன நான், பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை.” ஒரு வருடத்துக்கு…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான்.. புதிய வீடியோவால் பரபரப்பு..!

Posted by - October 21, 2024 0
குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் பகிர்ந்திருந்தார். யூடியூபர் இர்பானுக்கு குழந்தை பிறந்த வீடியோவை வெளியிட்ட நிலையில்,…

பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்

Posted by - December 11, 2024 0
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதிநேர ஆசிரியர்களை…

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவியிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: ஆன்லைனில் நூதன மோசடி

Posted by - September 8, 2023 0
புதுச்சேரி: வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு…

கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை மையம் தகவல்!

Posted by - November 13, 2025 0
“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *