எண்ணெய் நிறுவன கழிவுகளை மீனவர்கள் அள்ளுவதா? அப்பாவி மக்களைப் பலியாக்குவதா? சீமான் கண்டனம்

214 0

சென்னை:

சென்னை அருகே எண்ணெய் நிறுவனத்தின் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்களை அள்ள சொல்வதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை: CPCL எண்ணெய் நிறுவனத்தின் தவறினால் வெளியேறிய எண்ணெய்க் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்கள் அள்ளுவதா? அரசின் கவனக்குறைவுக்கு அப்பாவி மக்களைப் பலியாக்க திமுகவின் திராவிட மாடல் அரசு துணிந்துவிட்டதா?எண்ணெய் நிறுவன கழிவுகளை மீனவர்கள் அள்ளுவதா? அப்பாவி மக்களைப் பலியாக்குவதா? சீமான்  கண்டனம் | Naam Tamilar Chief Seeman condemns CPCL oil spill row - Tamil  Oneindia
உரிய பாதுகாப்புக் கருவிகளோடு முறையானப் பயிற்சி பெற்றவர்களை எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்துவதனை விட்டுவிட்டு, எவ்வித பாதுகாப்புக் கருவிகளும் கொடுக்காமல் மீனவ மக்களை ஈடுபடுத்துவதென்பது ஒரு நல்ல ஆட்சிக்கு அழகல்ல என்பதனைத் தாண்டி அடிப்படை மனித உரிமை மீறலாகும். “எங்களுக்கு இந்தக் கைகளால்தானே வாக்களித்தீர்கள்”, என்று தன் ஆட்சியின் கீழுள்ள ஏழை எளிய மக்களின் அதே கைகளுக்கு, திமுகவின் தண்டனை அளிக்கும் செயலா இது? என்று கேட்கத் தோன்றுகிறது.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு வகையில் பேசியும், களத்தில் அதற்கு மாறாகவும் ஈடுபட்டு வரும் CPCL நிறுவனமும், அதனை சரிவர கவனிக்காத தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியமும் தான் தண்டனைக்கு ஆளாக வேண்டுமேயொழிய, ஏற்கனவே பெருமழையினாலும் எண்ணெய்க் கசிவினாலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவப் பெருங்குடி மக்களல்ல.

இந்தக் கொடிய செயலினை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டும். பாதுகாப்புக் கருவிகளோடு முறையானப் பயிற்சி பெற்றவர்களை எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தவேண்டும். மேலும், இதுவரை இந்த அபாயகரமானச் செயலில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், துயர் துடைப்பு உதவிகளும் தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

Related Post

கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாக கூறி வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.82 ஆயிரம் மோசடி

Posted by - June 27, 2023 0
போரூர்: ராமாபுரம், ராயலா நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி ஆரோக்கியராஜ். ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கேன்டீன் நடத்தி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு…

திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு

Posted by - June 18, 2025 0
தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஜுன் 25ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம், தர்ணாவில் ஈடுபட உள்ளனர். தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூன்…

பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

Posted by - June 7, 2025 0
மதுரையில் பிற மாநாடுகளுக்கு அனுமதி அளித்தபோது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்து…

தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியதுதான் அதிமுக அரசாங்கம் – இபிஎஸ்

Posted by - April 13, 2024 0
தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலமாக தங்கத்தை வாரி வழங்கியது தான் அதிமுக அரசாங்கம் என தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக…

கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - May 17, 2023 0
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதலமைச்சர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப முதலமைச்சர் உத்தரவு தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *