கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாக கூறி வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.82 ஆயிரம் மோசடி

300 0

போரூர்:

ராமாபுரம், ராயலா நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி ஆரோக்கியராஜ். ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கேன்டீன் நடத்தி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம பெண் “வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுகிறேன். உங்களது கிரெடிட் கார்டின் தொகை வரம்பை மேலும் ரூ.50ஆயிரம் அதிகரித்து தருகிறேன்” என்று கூறினார்.கிரெடிட் கார்ட் பேமெண்டை தவணை முறையில் கட்டப்போகிறீர்களா? முதல்ல இதை  படிங்க..! | Keep in mind the following factors before opting for credit card  EMIs - Tamil Goodreturns

இதை உண்மை என்று நம்பிய அந்தோனி தனது கிரெடிட் கார்டு எண் மற்றும் ரகசிய ஓ.டி.பி எண் விபரங்களை அவரிடம் கூறினார். 2 நாட்கள் கழித்து அந்தோனி தனது மோட்டார் சைக்கிளுக்கு கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் போட சென்றார். அப்போது கிரெடிட் கார்டின் தொகை வரம்பு முடிந்துவிட்டது என்று குறுந்தகவல் வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ஏற்கனவே அந்தோனியின் வங்கிக் கணக்கில் 3 தவணைகளாக ரூ. 81 ஆயிரத்து 760 எடுக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம பெண் நூதனமான முறையில் பணத்தை சுருட்டி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருகம்பாக்கம், நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் துவாரகேஷ் சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் ரூ.30 ஆயிரம் முதலீடு செய்தால் தினந்தோறும் மாலையில் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது.

இதை உண்மை என்று நம்பிய அவர் அதில் இருந்த “கூகுள் பே” எண்ணிற்கு ரூ.30 ஆயிரம் பணம் அனுப்பி முதலீடு செய்தார். சிறிது நேரத்தில் மேலும் ரூ.50 ஆயிரம் பணம் அனுப்புமாறு மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்தது. இதனால் சந்தேகமடைந்த துவாரகேஷ் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் மோசடி கும்பல் என்பது தெரிந்து சுதாரித்துக்கொண்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Post

விறகுக்கடை முதலாளியாக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் தளபதியாக மாறியது எப்படி?

Posted by - August 23, 2024 0
விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராக எப்படி மாறினார்? யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? விரிவாக பார்க்கலாம்.நடிகர் விஜய் தனது அரசியல்…

எதிர்நீச்சலில் இவர் தான் இனி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவரா??வெளியான Recent தகவல்!

Posted by - September 13, 2023 0
எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும்…எல்லோருமே பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே…

கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Posted by - November 5, 2025 0
“தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு, சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மழை எச்சரிக்கை குறித்து தெரிந்து கொள்வோம்” “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று…

“கமல்ஹாசன் அரசியல்வாதியே இல்லை… அவர் ஒரு பச்சோந்தி!” – ஈ.பி.எஸ். விமர்சனம்

Posted by - December 9, 2023 0
பச்சோந்தியை விட விரைவாக நிறம் மாறும் தலைவர் கமல்ஹாசன் – எடப்பாடி பழனிசாமி நடிகர் கமல்ஹாசனை அரசியல்வாதியாகவே தான் கருதவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அவர்…

சனி சஷ யோகம்: 2025-ல் பண வரவு முதல் புதிய வேலைவாய்ப்பு வரை.. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்!

Posted by - November 12, 2024 0
சனி தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். இது சஷ ராஜயோகத்தை உண்டாக்கும். இந்த காலம் மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். வேத ஜோதிடத்தில்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *