1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. அருமையா இருக்கும்…

188 0

தினமும் காலையில் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு ம், தேங்காயும் உள்ளதா? அப்படியானால் இவ்விரு பொருட்களையும் கொண்டும் சுவையான உளுந்து சட்னி தயார். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சத்தானமும் கூட.

உங்களுக்கு உளுத்தம் பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க..  அருமையா இருக்கும்... | Ulundu Chutney Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு – 1/4 கப்

* பச்சை மிளகாய் – 5

* தேங்காய் – 1/4 கப்

* சின்ன வெங்காயம் – 5

* புளி – 1 டீஸ்பூன்

* பூண்டு – 4

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, புளி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வறுக்க வேண்டும்.

* பின்பு வத்க்கிய பொருட்களை இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தல் மாற்றிக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடனதும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான உளுந்து சட்னி தயார்.

Related Post

வசூல் திணறும் தக் லைஃப்.. அடித்து நொறுக்கும் விஜயகாந்தின் வாரிசு

Posted by - June 14, 2025 0
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று தியேட்டரில் வெளியாகி இருந்தது படை தலைவன் படம். இப்படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், அருள்தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இளையராஜா…

மது வெறியை கட்டுபடுத்தும் எளிய மருந்துகள்,மாத்திரைகள்- ஆய்வில் தகவல்.!

Posted by - March 6, 2023 0
மது அளவை குறைக்க வேண்டும் என்று விரும்புகின்ற நபர்களை மேலும் ஊக்கப்படுத்துவதாக இந்த மருந்து அமையும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.. அளவுக்கு அதிகமாக மது அருந்துவது எண்ணற்ற…

14 மணிநேர தண்ணீருக்கு அடியில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் செய்த வேலை- ஆச்சரியப்படும் ரசிகர்கள்

Posted by - June 13, 2023 0
ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உட்பட சில வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அடுத்து இவரது நடிப்பில்…

சப்பாத்திக்கு அருமையான காஷ்மீரி மட்டன் குருமா

Posted by - April 4, 2023 0
முஸ்லீம்கள் நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள். சூடான சாதத்துடன் சாப்பிடவும் இந்த ரெசிபி சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் – அரை கிலோ வரமிளகாய்…

பிக் பாஸ் சீசன் 7 -ல் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியாகப்போகும் பிரபலம்.. யார் தெரியுமா?

Posted by - October 12, 2023 0
பிக் பாஸ் 7 கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களை விட 7…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *