`திருட்டுப்போன பைக்கை ஓட்டி வந்த போலீஸ்’ – தஞ்சாவூர் டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்த விவசாயி

249 0

“திருட்டுப்போன பைக்கை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் ஒருவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது. போலீஸ் என்பதால் பயந்துபோன நான், பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை.”

ஒரு வருடத்துக்கு முன்பு காணாமல்போன பைக்கை, ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதாகக் கூறி அபராதம் கட்ட வலியுறுத்தி, போலீஸிடமிருந்து விருத்தாசலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு வந்த மெசேஜ் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருட்டுப்போன பைக்கை, போலீஸ் ஒருவர் பயன்படுத்திவருவதாகக் கூறி அந்த விவசாயி தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள வேட்டைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (40) என்ற விவசாயி. இவர் கடந்த 2018-ல் டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்டிஆர் பைக்கை வாங்கி ஓட்டிவந்திருக்கிறார். சிவப்பு நிறம்கொண்ட அந்த பைக்கின் பதிவு எண் டி.என்.91, டி.1143. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு, டிசம்பர் 10-ம் தேதி இரவு சாவடிக் குப்பத்திலுள்ள தன் சகோதரர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.வீட்டின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு, இரவு அங்கேயே தங்கியிருக்கிறார். இதையடுத்து மறுநாள் காலை பார்த்தபோது அவருடைய பைக்கைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வெற்றிவேல் தனது பைக் திருட்டுப்போனதாகக் கூறி, விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸாரும் வழக்கு பதிவுசெய்து ரசீது கொடுத்ததுடன்,

விசாரணையை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் வெற்றிவேலின் செல்போனுக்கு ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிச் சென்றதற்காக ரூ.100 அபராதம் கட்ட வேண்டும் என நாகப்பட்டினம் போலீஸிடமிருந்து வந்த மெசேஜ் வெற்றிவேலுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து வெற்றிவேல், தன் நண்பர்களுடன் சேர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் தனது பைக்கைத் தேடியிருக்கிறார்.அந்த நிலையில், போலீஸ் ஒருவர் தன் பைக்கைப் பயன்படுத்திவருவது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தனது பைக்கைத் திருடியவர்கள் மீதும், தன் பைக்கைப் பயன்படுத்திவந்த போலீஸ் மீதும் நடவடிக்கை எடுத்து, தன் பைக்கை மீட்டுத் தர வேண்டும் என தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி கயல்விழியிடம் அவர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்து வெற்றிவேல் கூறியதாவது, “ஒரு வருடத்துக்கு முன்பு காணாமல்போன பைக்கை ஹெல்மெட் அணியாமல் ஓட்டியதாகக் கூறி, அபராதம் செலுத்த வலியுறுத்தி போலீஸிடமிருந்து மெசேஜ் வந்தது. இதைத் தொடர்ந்து திருட்டுப்போன பைக்கை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் சுரேஷ் என்பவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது.போலீஸ் என்பதால் பயந்துபோன நான், என் பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை. இதையடுத்து திருட்டுப்போன எனது பைக்கை உடனே மீட்டுத்தர வேண்டும். திருடிச் சென்றவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருட்டு வாகனத்தைப் பயன்படுத்திய போலீஸ் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எனது பைக்கை போலீஸ் பயன்படுத்திவரும் போட்டோ ஆதாரத்துடன் டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Related Post

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் ஷாரிக் தங்கி இருந்தாரா?- கர்நாடக தனிப்படை விசாரணை

Posted by - November 26, 2022 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக…

அமோனியா வாயு கசிவு விவகாரம்… தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவு

Posted by - December 27, 2023 0
சென்னை : சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு…

பெட்ரோலுடன் கலந்த தண்ணீர்.. வாகனங்கள் பழுதானதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

Posted by - August 27, 2024 0
நீண்ட காலமாகவே பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது, தரமான பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகி விடுவதாக தெரிவிக்கின்றனர்.…

சர்க்கரை நோயாளிகள்.. எந்த எண்ணெய்யை சமையலுக்கு யூஸ் பண்ணலாம்? நீரிழிவு நோயாளிக்கேற்ற எண்ணெய் இதுவா?

Posted by - November 29, 2023 0
சென்னை: நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதிலேயே பல குழப்பங்களு வந்துவிடும் நிலையில், என்ன எண்ணெய்யை சமைக்கலாம் என்பதில் அதற்கு மேல் குழப்பங்கள் உள்ளன. சர்க்கரை…

மன்சூர் அலிகானிடம் விரைவில் விசாரணை: சம்மன் அனுப்பி அழைக்க இருப்பதாக போலீசார் தகவல்

Posted by - November 22, 2023 0
சென்னை: நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *