கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கு இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் ரயில் நிலையம் அருகே கல்யாணி மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் 9 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியது. மேலும், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. அந்த சிறுவனை அவன் குடியிருந்த பகுதிக்கு சென்று காவல்துறை கைது செய்தது. அவனிடம் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கிறது.
இது தொடர்பாக காவல்துறை செய்தியாளர்களிடம்,“கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கும், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 15 வயது சிறுவனுக்கு இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.
பாலியல் வன்கொடுமை
இதில் சிறுவன், சிறுமியின் தந்தையால் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்கு பழிவாங்க வேண்டுமென முடிவு செய்த சிறுவன், அவரின் 9 வயது மகளான சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பிளேடால் அந்த சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறான்” எனத் தெரிவித்திருக்கிறது.
திருப்பதி: ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டம், செட்டேவாரி பள்ளியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். லதிகம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது வாலிபர். இருவரும் புங்கனூரில் உள்ள…
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடிய பன்மொழி வித்தகராக இருந்தார் ஜெயலலிதா. நடிகையாக இருந்து அரசியல்வாதியானவரும், ஆறு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக…
திருப்பதி: ஆந்திராவில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து முதல் ரக தக்காளிகள் வடமாநிலங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி…
365 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய பத்து ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருமாறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் இன்றளவும் 15 கோடி பேர்…