குழந்தையிலேயே ஏன் காது குத்துகிறார்கள் தெரியுமா..? தெரிந்து கொள்ளுங்கள்..

304 0

பெரும்பாலான குடும்பங்களில், குழந்தையின் முதல் பிறந்த நாளின் போது, காது குத்துவார்கள். சிலர், 5வது அல்லது 7வது மாதம் அல்லது ஒரு வயதுக்கு கொஞ்சம், 10வது அல்லது 11வது மாதம் காது குத்துவார்கள். சில வீடுகளில் 17வது மாதம் காது குத்துவார்கள்.

காலம் காலமாக குழந்தைகளுக்கு காது குத்தும் பழக்கம் மிகப்பெரிய கொண்டாட்டமாக பல்வேறு சமூகங்களில் குடும்பங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழந்தை பிறந்து மூன்று மாதம் முதல் ஒரு வருடம் அல்லது மூன்று வருடம், ஐந்து வருடங்கள் என்று அவரவர் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப காது குத்தும் வழக்கம் உள்ளது. குழந்தைகளுக்கு ஏன் காது குத்த வேண்டும் என்ற கேள்விக்கு, அழகுக்காக என்பது மட்டும் பதில் ஆகாது. காது குத்துவதால் குழந்தைகளின் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் பல விதமான நன்மைகள் கிடைக்கின்றன. அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு பொதுவாக எப்போது காது குத்தலாம்?

பெரும்பாலான குடும்பங்களில், குழந்தையின் முதல் பிறந்த நாளின் போது, காது குத்துவார்கள். சிலர், 5வது அல்லது 7வது மாதம் அல்லது ஒரு வயதுக்கு கொஞ்சம், 10வது அல்லது 11வது மாதம் காது குத்துவார்கள். சில வீடுகளில் 17வது மாதம் காது குத்துவார்கள். இது தான் வழக்கமாக இருக்கிறது என்று ஹத யோகா ஆசிரியை ஸ்லோக ஜோஷி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

குழந்தைக்கு காது குத்தும் போது எந்த உலோகத்தைப் பயன்படுத்தலாம்:

பொதுவாக குட்டிக் குழந்தைகளின் காதுகள் பஞ்சு போன்ற மிகவும் மென்மையாக இருக்கும். எனவே, வழக்கமாக பயன்படுத்தப்படும் வெள்ளி அல்லது தங்கத்தில் செய்யப்பட்ட சிறிய காதணிகள் அல்லது வளையங்கள் போடலாம். எடை குறைவான டைட்டானியமும் பயன்படுத்தலாம். இந்த உலோகங்கள், சருமத்தை பாதிக்காது மற்றும் மங்கிப் போகாது.

காது குத்துவதால் கிடைக்கும் நன்மைகள் :

  • செவித்திறன் மேம்படும் : காது மடல்களில் துளையிட்டு காதணி போடும் போது, அதிலிருக்கும் செவித்திறன் நரம்புகள் தூண்டப்பட்டு, குழந்தைகளின் உட்புற திறந்து, காது கேட்கும் திறன் மேம்படும்.
  • மூளையின் செயல்திறன் தூண்டப்படும் : வலது மற்றும் இடது மூளையுடன் நேரடியாக கனெக்ட் ஆகும் ஸ்பெஷலான ஒரு புள்ளி காது மடல்களில் இருக்கிறது. அந்த புள்ளியில் துளையிட்டு காது குத்தும் போது, மூளையின் இரண்டு பக்கமும் ஆக்டிவேட் ஆகிறது. அது மூளையின் செயல்திறனை தூண்டி மேம்படுத்துகிறது.
  • நுரையீரல் மற்றும் சுவாச ஆரோக்கியம் : காதுகளில் இருக்கும் அக்குபிரஷர் புள்ளிகள், நுரையீரல் மற்றும் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆஸ்துமா, மூச்சு பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை தடுக்கிறது.
  • இனப்பெருக்க ஆரோக்கியம் : காது குத்தும் இடத்தில் இருக்கும் மர்மப் புள்ளி, ஆண் மற்றும் பெண் இருவரின் இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம்.
  • கண் பார்வைக்கு நல்லது : காது மடலின் நடுப்பகுதி, கண்களுடன் தொடர்புடையது. அந்த பகுதியில் அவ்வபோது மென்மையாக நீவி விடுவது, பிரஷர் கொடுப்பது உள்ளிட்டவை கண் பார்வையை மேம்படுத்தும்.
  • அறுவை சிகிச்சைகளின் தந்தை என்று கூறப்படும் ஆச்சார்யா சுஷ்ருத்தா, ‘ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குடலிறக்கத்துக்கு சிகிச்சையாகவும், காது குத்துவதை பரிந்துரை செய்துள்ளார்’ என்று ஜோஷி தெரிவித்துள்ளார்.
  • மன நலத்துக்கு துணையாக, படபடப்பு, பதற்றம், உள்ளிட்டவற்றை காது குத்துவதால் மேம்படுத்தலாம்.காது கத்துவது மட்டுமல்லாமல், காதணிகள் போட்டுக் கொள்வதும் அவசியம் என்றும், அதனால் உடல் முழுவதும் ஆற்றல் பரவும் என்றும் ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.குழந்தைகளுக்கு காது குத்தும் போது, பயன்படுத்தும் கருவிகள் தூய்மையாகவும், ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Related Post

பிக் பாஸில் ரீஎண்ட்ரியாகும் 3 போட்டியாளர்கள் லிஸ்ட்.. உறுதியான தகவல்! யார் யார் பாருங்க

Posted by - November 21, 2023 0
பிக் பாஸ் ஷோவில் இந்த வருடம் பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கின்றனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் உடன் ஷோ தொடங்கிய நிலையில், வாரம் ஒரு போட்டியாளர் என…

‘அனிமல்’ திரைப்படமும் ‘டாக்சிக்’ கருத்துகளும் – இணையத்தில் சூடுபிடித்த ‘ஆல்ஃபா ஆண்’ விவாதம்

Posted by - January 31, 2024 0
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீக் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி…

விவாகரத்து, புற்றுநோய் பாதிப்பு என பல கஷ்டங்களை அனுபவித்த மனிஷா கொய்ராலா இப்போது எப்படி உள்ளார்?

Posted by - May 4, 2023 0
மனிஷா கொய்ராலா நடிகை மனிஷா கொய்ராலா, 1994ம் ஆண்டு வெளியான ஏ லவ் ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர். பாலிவுட் டாப் நாயகியாக வலம் வந்த இவர்…

பிரேம்ஜியை புறக்கணித்து பிரபல நடிகர் மகன் திருமணத்திற்கு சென்ற இளையராஜா! குடும்பத்தில் பிரச்சனையா?

Posted by - June 13, 2024 0
நடிகர் பிரேம்ஜியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. 45 வயதாகும் பிரேம்ஜிக்கு பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் மிக சிம்பிளாக நடந்தது. இந்து என்ற பெண்ணை கரம்பிடித்த…

கார்த்திகை பொரி உருண்டை செய்ய ரெசிபி..!

Posted by - December 3, 2022 0
Karthigai deepam | திருகார்த்திகைக்கு உகந்த பொரி உருண்டையை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். நம் மரபில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *