ரிமோட்டால் டிவியை அடித்தது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்

184 0

இண்டியா கூட்டணியை ஆதரித்து மார்ச் 29-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் விடுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: ரிமோட் எடுத்து டிவியில் அடித்தவர் தானே அங்கு செல்கிறார் என கூறினார்கள். நம் வீட்டு ரிமோட், நம் வீட்டு டிவி, ஆனால் டிவிக்கான மின்சாரத்தையும், ரிமோட்டுக்கான ஒரு பேட்டரியையும் எடுக்க பார்க்கும் ஒரு சக்தி மத்தியில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

காந்தி இறக்கவில்லை. மதச்சார்பற்ற இந்தியாவுக்காக குண்டு ஏந்தி இறந்தார். அத்தகைய மதச்சார்பற்றஇந்தியாவுக்காக தான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. இது தியாகமல்ல, இது ஒரு வியூகம்.அனைத்து இடங்களிலும் ஓடி ஓடி பிரச்சாரம் செய்வதை விட தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில இடங்களை திமுகவுடன் ஆலோசித்து தேர்வு செய்துள்ளோம்.

அதன்படி, மார்ச் 29-ம் தேதி ஈரோட்டில் தொடங்கி, 30-ல் சேலம், ஏப்.2-ல் திருச்சி, 3-ல் சிதம்பரம், 6-ல் பெரும்புதூர், சென்னை, 7-ல் சென்னை, 10-ல் மதுரை, 11-ல் தூத்துக்குடி, 14-ல் திருப்பூர், 15-ல் கோவை, 16-ல்பொள்ளாச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளேன். இங்கு வரலாறு காணாத அளவில் மக்கள் திரள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்கட்டமாக தொகுதிவாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Post

“சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை, எங்கே போனார் அப்பா.?“

Posted by - July 19, 2025 0
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு திருவாரூரில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மக்களை…

தவெக மேடையில் ஒலித்த PTR பெயர் – ஊழலை பற்றி பேசியதால் ஓரங்கட்டப்பட்டதாக ஆதவ் பரபர பேச்சு

Posted by - August 21, 2025 0
#TVK | #TVKVijay |#VijaySpeech|#TVKMaduraiMaanadu | #TamilagaVettrikazhagam | #Vijay | #TVKLeader | #TVKMaanadu | #MaduraiTVKMaanadu | #TVKFlag | #தமிழகவெற்றிக்கழகம் | #TVKMaduraiMaanaduUpdateWithpixelmedia…

அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? – அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!

Posted by - December 20, 2024 0
 “மதத்தின் பெயரால் அரசியல் செய்யலாம்” என்கிறார் அமித் ஷா. மதத்துக்கு எதிராக அம்பேத்கரின் கருத்துக்கள் அமைந்திருப்பதால் அவரை இழிவு செய்கிறார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். அம்பேத்கரை அவமதித்த…

குற்றங்களை கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Posted by - February 10, 2025 0
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருவதாகவும், பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது…

“நான் இப்படி செய்வனோ..?” – ஜி.கே.மணி உருக்கம்

Posted by - May 17, 2025 0
45 ஆண்டுகாலமாக இருக்கிறேன். ஒரு சின்ன உயிருக்கு கூட தீங்கு விளைவிக்க நினைக்க மாட்டேன். ஜி.கே.மணி இப்படி செய்வாரா என நீங்களும் உங்கள் மனசாட்சி தொட்டு கேட்டுக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *