எதிர்பாராததை எதிர்பாருங்கள் – பாஜக வேட்பாளராக களமிறங்கும் நடிகை கங்கனா..!!

196 0

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா போட்டியிடவுள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் நாடே தற்போது திருவிழா போல் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுகிறது.

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர் . அந்த வகையில் தேசிய கட்சியான பாஜகவும் தங்கள்து வேட்பாளர் பட்டியலை தனித்தனியாக பிரித்து வெளியிட்டு வருகிறது.

இதில் பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

பொதுவாக மக்களின் பிரச்சனைகளுக்கு விடாமல் குரல் கொடுத்து வரும் கங்கனா இதற்காக பல சர்ச்சைகளில் சிக்கி படாத அவஸ்தை பட்டார் .இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் கங்கனா ரனாவத் போட்டியிட போவதாக பாஜக அறிவித்துள்ளது . மண்டி தொகுதி நடிகை கங்கனாவின் பிறந்த மண் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இறுதியில் மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

Related Post

அ.தி.மு.க. கூட்டணியில் சேர திட்டம்? – கட்சி நிர்வாகிகளுடன் சீமான் தீவிர ஆலோசனை

Posted by - July 23, 2025 0
  #Seeman #NaamThamizha Katchi #ADMK #TNAssemblyElection #சீமான் #நாம்தமிழர்கட்சி #அதிமுக #எடப்பாடிபழனிசாமி #தமிழகசட்டசபைதேர்தல் 2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியை வழி நடத்தி வரும்…

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? – இபிஎஸ் கேள்வி!

Posted by - July 11, 2025 0
ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் பேசிய அவர், ஏழை மாணவர்கள் உயர்கல்வி…

டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

Posted by - September 17, 2025 0
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…

பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.?

Posted by - November 13, 2025 0
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு 5ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது சாத்தியமா.?…

தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை – சசிகலா பகிரங்க குற்றச்சாட்டு..!!

Posted by - November 25, 2024 0
தமிழ்நாட்டில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளதாக சசிகலா கூறியுள்ளார். இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *