பகலில் மந்தமாக இருப்பது எல்லோருக்கும் எப்போதாவது ஒருமுறை ஏற்படும். இருப்பினும், நீங்கள் அடிக்கடி இந்த பிரச்சனையை சந்திப்பதாக கவனித்திருந்தால், நீங்கள் ஹைப்பர் சோம்னியாவை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம். அதிக தூக்கம் உங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது என்றால், இது சில பாதிப்புகளையும் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹைப்பர்சோம்னியா என்பது அதிக பகல்நேர தூக்கத்திற்கான பாதிப்பாகும்.பொதுவாக சிலருக்கு இரவில் நன்றாக தூங்கினாலும் பகலில் தூக்கம் வரலாம். இதன் விளைவுகள் அன்றாட வாழ்க்கையில் மோசமாக இருக்கும் என்பதை பலரும் உணர்ந்திருக்க கூடும். இதை சரியான முறையில் கையாள சில வழிகள் உள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.நிலையான தூக்க சுழற்சி : பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை தவிர்ப்பதற்கான முதல் வழி, ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் தூங்குவதற்கு செல்லுங்கள். இது உங்கள் உடலை தூக்க முறைக்கு ஏற்ப மாற்ற உதவும். மேலும், உங்கள் படுக்கையறை நன்கு காற்றோட்டமாகவும், குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், அமைதியாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வசதிக்கேற்ற மெத்தை, தலையணைகள் மற்றும் போர்வைகளை வாங்கி பயன்படுத்துங்கள்காஃபின் : காஃபின் ஒரு முக்கிய மூலப்பொருளாகும். இதை உட்கொள்வது மூளைக்கும் உடலுக்கும் இடையில் பயணிக்கும் செய்திகளை விரைவுப்படுத்தும். இது ஒரு நபர் அதிக விழிப்புடனும், எச்சரிக்கையுடனும், ஆற்றலுடனும் இருக்கும்படி உணர வைக்கிறது. எனவே காபி, கோலா, டீ, சாக்லேட் போன்றவற்றை தவிர்ப்பதால் பகல் நேர தூக்கத்தை தவிர்க்கலாம். மேலும், தூக்க மாத்திரைகளையும் தவிர்ப்பது நல்லது. இவற்றுடன் புகையிலை மற்றும் பிற நிகோடின் சார்ந்த பொருட்களிலிருந்தும் விலகி இருங்கள்.சிறந்த பணி மாற்றங்கள் : உங்கள் உடல்நிலையைப் பற்றி உங்கள் நீங்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம். ஹைப்பர் சோம்னியாவைக் கையாளும் ஒருவருக்கு, இரவு நேர ஷிஃப்ட் வேலை செய்வது தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது அவர்களின் நிலையான தூக்க சுழற்சியை சீர்குலைக்கும். எனவே, பகல் நேரங்களை கொண்ட வேலைக்கு சென்று உங்கள் தூக்க நேரத்தை சீர்படுத்துங்கள்மதுவைத் தவிர்க்கவும் : மது பெரும்பாலும் உங்களை தூங்க வைக்க உதவும் ஒரு பானமாக கருதப்படுகிறது. இது மன அழுத்தத்தை குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், இதற்கு மாறாக மது என்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது உங்களை இரவு நேரத்தில் விழித்திருக்கச் செய்யும், மற்றும் அடிக்கடி மோசமான கனவுகளையும் ஏற்படுத்தும். மேலும் இது உங்களின் உடல் நலத்தையும் பாதிக்க செய்யும். ஹைப்பர் சோம்னியாவில் இருந்து விடுபட மதுவை தவிர்ப்பது நல்லது.வாகனம் ஓட்டுதல் : நீங்கள் ஹைப்பர்சோம்னியா அல்லது பிற தொடர்புடைய மருத்துவ நிலைமைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவராக இருந்தால், வாகனம் ஓட்டுவது மட்டுமல்லாமல், உங்களுக்கோ மற்றவர்களுக்கோ ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு உபகரணத்தையும் இயக்கும்போது கவனமாக இருங்கள். ஏனெனில் சில நேரங்களில் இந்த பாதிப்பு நிலையற்ற மனநிலையை தர கூடும் என்பதால் அதிக கவனம் தேவை.
Related Post
இடைக்கால போர் நிறுத்தம் தொடர்கிறது: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கத்தார், எகிப்பு, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிணைக்கைதிகளை…
”திரும்ப திரும்ப அடிச்ச இந்தியா” கதிகலங்கி அமெரிக்காவிடம் சரணடைந்த பாக்., துணை பிரதமர் ஒப்புதல்
இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்த கோரிக்கை விடுத்தது ஏன்? என்பது குறித்து பாகிஸ்தான் துணை பிரதமர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் விமானப்படை…
🔴LIVE : Ishayoga MahaShivaratri | மகா சிவராத்திரி விழா 2026 | Sadhguru | தொடர் நேரலை |MAHASHIVARATRI
#MahaShivaratri #IShaYoga #AmitShah 🔴LIVE : Ishayoga MahaShivaratri | மகா சிவராத்திரி விழா 2026 | Sadhguru | தொடர் நேரலை | MAHASHIVARATRI #MahaShivaratri…
அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு
அமெரிக்கா – ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவித்த உடனேயே, பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என ஈரான் மறுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில்…
சந்தையை திறந்து விடுங்க.. சீனாகிட்ட இருந்து பிரிக்கணும் – இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஸ்கெட்ச்
அமெரிக்க எண்ணெய் பொருட்களுக்காக இந்திய சந்தையை திறக்க வேண்டும் என, புதிய தூதரக ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் வலியுறுத்தியுள்ளார். India Us Trade: மோடியும் ட்ரம்பும் ஆழ்ந்த…
Categories
- MEMES (12)
- அரசியல் (184)
- இந்தியா (468)
- உலகம் (173)
- சினிமா (812)
- தமிழ்நாடு (1,085)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (257)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- ஆரம்பமே அதிர்ச்சி.. விஜய் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. தேர்தல் பரப்புரை நடக்குமா?

- பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்: தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து

- முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

- ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?

- 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?
