அதிமுக ஆட்சியை விமர்சிக்க பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி வேண்டும் : பழனிசாமி ஆவேசம்!

209 0

 

அதிமுக ஆட்சியை விமர்சிக்க தகுதி வேண்டும். குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் இல்லை என கோவையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி என்றும், அதிமுகவை பற்றி அவதூறாக பேசுவதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.DMK

திமுக அரசை கண்டித்தும், குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும் கோவை சிவானந்தா காலனி பகுதியில், அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.ADMK NEWS

இதில் பங்கேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை திமுக அரசு ஒவ்வொன்றாக கைவிட்டு வருகிறது என்றும், மக்களுக்காக புதிய திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.ஒரு ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு திமுகவின் ஆட்சி உதாரணமாக உள்ளது. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது. ஸ்டாலின் பொம்மை முதல்வராக உள்ளார். எனவே அதிமுக குறித்து அவதூறு பரப்புவதை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறிய அவர், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்றும் தெரிவித்தார்.

53 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தொழிற்சாலைகள் முடங்கியுள்ளதால் தொழில் வளமும் பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறினார்.

மின்கட்டண உயர்வால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடந்து வருவது குடும்ப ஆட்சி என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

Related Post

தவெக தலைவர் விஜய் பேசியதில் உடன்பாடு இல்லை – திருமாவளவன்

Posted by - December 7, 2024 0
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கூறியதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று…

முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை… எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

Posted by - August 27, 2025 0
முதலமைச்சராக பொறுப்பேற்பேன் என்று நான் ஒரு முறை கூட கருதியதில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக-வின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு…

மேடையில் அமித் ஷா அப்படி என்ன சொன்னார்? தமிழிசை அளித்த பதில்

Posted by - June 13, 2024 0
ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.…

விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் – லிஸ்டில் இருப்பது என்ன?

Posted by - August 23, 2025 0
TVK Symbol: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம், ஆட்டோவை பொது சின்னமாக பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. TVK Symbol: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்…

“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் – என்ன சொன்னார் இபிஎஸ்.?

Posted by - July 18, 2025 0
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், ஆட்சி அதிகாரம் குறித்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தவெக கூட்டணி குறித்து சூசக பதிலை கூறியுள்ளார். அவர் என்ன…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *