திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராக உள்ளது : பிரதமர் மோடி

292 0

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசி எனக்கு வலுவைத் தருகின்றன

சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். சென்னை என் மனதை வென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த துடிப்பான நகரத்தின் நலனுக்காக நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று சென்னையைச் சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக, ‘வாழ்வை எளிதாக்கும்’ முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், திறப்பதற்கும் நான் அடிக்கடி இங்கு வந்துள்ளேன்.

இதன் அடிநாதமாக இருப்பது இணைப்புகள். சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் திறக்கப்பட்டது. வரும் காலங்களில் எழும்பூர் ரயில் நிலையம் உட்பட இங்குள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.

சென்னை-கோயம்புத்தூர் மற்றும் சென்னை-மைசூரு இடையேயான இணைப்பு மேம்பட உதவி புரிந்த வந்தே பாரத் விரைவு வண்டிக்கு நன்றி. சென்னையில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு உதவும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் வலைப்பின்னல்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை போன்ற முக்கிய சாலைத் திட்டங்கள் மற்றும் தற்போதுள்ள மற்ற சாலைத் திட்டங்களின் விரிவாக்கம் வணிகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும்.

வீட்டு வசதித் துறையில் குறிப்பிடத்தக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சில காலத்திற்கு முன்பு, இலகுவான வீடுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட பல வீடுகள் திறக்கப்பட்டன, இதனால் பல விருப்பங்களுக்கு சிறகுகள் கிடைத்தன. மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் மற்றும் ஐஐடி-மெட்ராஸின் டிஸ்கவரி கேம்பஸ் போன்ற திட்டங்களில் எங்கள் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது, இது வணிகத்தையும் புதுமை கண்டுபிடிப்புகளையும் அதிகரிக்கும்.

தமிழ் கலாச்சாரத்திற்கு நமது அரசு மிகுந்த மரியாதை அளிக்கிறது. ஐ.நா.வில் தமிழில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொண்டேன்! உலக அரங்கில் தமிழ் கலாச்சாரத்தையும் மொழியையும் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் கலாச்சாரத்தின் அம்சங்களை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதுப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை டிடி தமிழ் தொடங்கப்பட்டது, இது இந்த மாநிலத்தின் சிறப்பு மிகு கலாச்சாரத்தைக் கொண்டாடுவதில் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.

சாலைகள், துறைமுகங்கள், நகர்ப்புற போக்குவரத்து, கலாச்சாரம், வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி மற்றும் பல துறைகளில் என்டிஏ அரசு தொடர்ந்து பணியாற்றும். அதே நேரத்தில், பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவது, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கிய பிரச்சனைகளில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம்.

பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது. அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அணுகுவதில்லை, குறிப்பாக சவால்கள் நிறைந்த கடினமான நேரங்களில். கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்த சமீபகால தகவல்கள், நமது நாட்டின் வியூக நலன்களுக்கும், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரஸும் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Post

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு செந்தில் பாலாஜி உருக்கமான கடிதம் …

Posted by - February 13, 2024 0
சிறையில் இருந்துகொண்டே இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடித்து வந்த செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக…

அதிகார துஷ்பிரயோகம் – கொதிக்கும் அண்ணாமலை..!!

Posted by - July 26, 2024 0
முதல்வர் ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்றால், அவரது கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்கலாம். அதை விடுத்து, பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில் அதிகார துஷ்பிரயோகம்…

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. குரல் கொடுத்த விஜய், ஓடி ஒளிந்த கமல்

Posted by - December 27, 2024 0
தற்போது தமிழகமே அதிர்ச்சியில் இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவி பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார். இந்த செய்தியை தற்போது கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் உருவாக்கி இருக்கிறது. இதற்கு காரணமான ஞானசேகரன்…

மாணவிகள், இளம்பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து வீடியோ பதிவு செய்த பாதிரியார்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

Posted by - March 16, 2023 0
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அடுத்த பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ.   இவர் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். கடந்த…

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 3 ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பு

Posted by - September 15, 2023 0
சென்னை: நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முன்எச்சரிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *