தொகுதி வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் ஒரு வார்ததை கூட பேசாத திமுக எம்.பி.க்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

158 0

வரும் நாடாளுமன்றத் தேர்தல், நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் தேர்தல். நாட்டை வலிமையாக, பொருளாதாரத்தில் முதன்மையாக மாற்ற, நதி நீர் இணைப்பு உள்ளிட்ட மிக முக்கியமான முடிவுகள் எடுக்க, நமது பிரதமர் அவர்கள் கரங்களை, நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும். நமது கோவை நாடாளுமன்றத் தொகுதியும், நமது பிரதமர் கொண்டு வரும் நலத்திட்டங்கள் மூலம் முழுமையாகப் பலன்பெற, இங்கிருந்தும், நாம் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வரவிருக்கும் தேர்தல், நாட்டுக்கான தேர்தல். நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல். எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியவில்லை. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மட்டும்தான் ஒரே தகுதியான வலிமையான பிரதமராக இருக்கிறார். வீட்டையும் நாட்டையும் காக்கும் ஒரே தலைவர் நமது பிரதமர் மோடி அவர்கள் மட்டும்தான்.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த திட்டங்களான, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தில், ஒவ்வொரு கிராமத்துக்கும் பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், முழுமையாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி கிடைக்காமல் இருக்கிறது.

வீடுகள் இல்லாதவர்கள் அனைவருக்கும் மோடி வீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தனை ஆண்டுகளாகப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், தங்கள் முக்கியப் பணிகளான இவை எதையும் நிறைவேற்றவில்லை. கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ. 1,445 கோடி நிதி ஒதுக்கியும், சாலைகள் கூட சரிவர மேம்படுத்தப்படாமல், அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிராமங்களைச் சென்றடையாமல் வைத்திருக்கிறார்கள். கோவை வளர்ச்சிக்காகப் பேச வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், பத்து ஆண்டுகளாகத் தொகுதிக்காக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

இவை அனைத்தும் மாற, கோவைக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல், வளர்ச்சித் திட்டங்களுக்கும், உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் செலவிட, ஜல் ஜீவன் திட்டம் மூலம், சுத்தமான குடிநீர் ஒவ்வொரு வீடுகளையும் சென்றடைய, நொய்யல் நதியை சுத்தப்படுத்த ஒதுக்கப்பட்ட ரூ.990 கோடியுடன், கௌசிகா நதியையும் சேர்த்து மீட்டெடுக்க, கோயம்புத்தூர் மாநகரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளும், நகரத்தின் அடிப்படை வசதிகள் அனைத்தும் பெற்று வளர்ச்சி பெற, மத்திய அரசின் திட்டம் முழுமையாக மக்களைச் சென்று சேர்வதைக் கண்காணிக்க, கேள்வி கேட்க, நமது குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய, அவர்கள் அடுத்த 25 ஆண்டுகளில், வளர்ச்சி பெற்ற இந்தியாவில் வசிக்க, உங்கள் அன்புத் தம்பி, உங்கள் வீட்டுப் பிள்ளை, அண்ணாமலை ஆகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Post

மாஸ்க், தடுப்பூசி, ஆக்சிஜன் எல்லாத்தை ரெடி பண்ணுங்க.. மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!

Posted by - December 27, 2022 0
கொரோனா தடுப்பூசி மையம் போதிய மருத்துவ பணியாளர்களுடன் தயாராக இருக்க மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை…

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே வெள்ளத்திற்கு காரணம்: சீமான் காட்டம்…

Posted by - December 6, 2023 0
சென்னை: திமுக அரசின் தோல்வியே சென்னை வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து சீமான் கூறியிருப்பதாவது: இயற்கைச் சீற்றத்தை…

என் குழந்தையோட அப்பா..! கர்ப்பமாக்கி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிசில்டா புகார்

Posted by - August 29, 2025 0
நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார். Madhampatty Rangaraj: மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு…

சர்க்கரை நோயாளிகள்.. பேரீச்சம் பழம் சாப்பிடலாமா.. பேரீச்சம்பழம் சாப்பிட்டால் என்னாகும்? அட ஆச்சரியம்

Posted by - December 5, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு நிறைந்த பேரீச்சம் பழம் சாப்பிடலாமா? இந்த பழத்தை சாப்பிட்டால் என்னாகும்? தித்திப்பு நிறைந்த பழம் என்பதால், நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம் பழம்…

திண்டுக்கல்: குப்பையில் வீசப்பட்ட பெண் சிசுக்கள்; நாய்கள் குதறிய அவலம் – நடந்தது என்ன?!

Posted by - July 31, 2023 0
திண்டுக்கல், மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் அருகே மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று காலையில் அந்தக் குப்பைத் தொட்டியை நாய்கள் சூழ்ந்து நின்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *