தமிழ்நாட்டில் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது பரப்புரை – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

333 0

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பரப்புரையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அனல் பறக்க வாக்கு சேகரித்ததனர். தமிழ்நாடு முழுவதும் அரசியல் களம் கடந்த ஓரிரு வாரம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களின் வருகையால் பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகரித்து காணப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

கடைசி நாளில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டனர்.தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 76 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் களம் காண்கின்றனர். கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்களும், நாகப்பட்டினத்தில் குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஒரே ஒரு மக்களவைத் தொகுதியை கொண்ட புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அதிமுக தமிழ்வேந்தன், 19 சுயேச்சைகள் உட்பட 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Related Post

வெயில் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் : எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்..!

Posted by - April 22, 2023 0
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேரடி வெயிலில் செல்வது அசௌகரித்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று…

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்- தமிழ்நாட்டில் பஸ்-ஆட்டோக்கள் ஓடுமா?

Posted by - July 8, 2025 0
சென்னை: 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.…

TVK கட்சிக்கு அஜித் ஆதரவா? Race Car – ஒரே Colour -ல இருக்கே! குழப்பத்தில் நெட்டிசன்ஸ்!

Posted by - November 28, 2024 0
அஜித்தும், விஜயும் சினிமாவுல அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. ஆரம்பத்தில அஜித் – விஜய் – பிரசாந்த் என மூனுபேருக்கும் போட்டி இருந்துச்சு. அப்புறம்…

இந்த 6 பழங்களில் ஒன்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்க ஆயுளை அதிகரிக்குமாம்… எப்படி தெரியுமா?

Posted by - December 15, 2023 0
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பழங்கள் அவசியமானவை என்று சிறு வயது முதலே நமது மனதில் பதியவைக்கப்பட்டள்ளது. ஆனால் சில பழங்களை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கூடுதல்…

கழுத்து பகுதியில் Tattoo குத்திய இளைஞர் பலி.. நடந்தது என்ன? எய்ட்ஸ், ஹெபடைட்டிஸ் பி பரவும் ஆபத்து

Posted by - September 7, 2023 0
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கழுத்து பகுதியில் டாட்டூ குத்தியதால் இளைஞர் ஒருவர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கியுள்ளார்கள். அந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *