நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்- தமிழ்நாட்டில் பஸ்-ஆட்டோக்கள் ஓடுமா?

181 0

சென்னை:

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதுதொடர்பாக தொ.மு.ச. தொழிற்சங்க பேரவையின் பொதுச்செயலாளர் மு.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப்பின் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ‘இந்தியா தொழிலாளர் மாநாடு’ 2015-ம் ஆண்டு முதல் கூட்டப்படவில்லை.

இந்திய நாட்டு தொழிலாளிகள் 100 ஆண்டுகளுக்கு மேலாக போராடி பெற்ற பணியிட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் முழுமையாக தொழிலாளர்களுக்கு பயன்தரவில்லை என்றாலும், அந்தச் சட்டங்களை முன்வைத்து, தங்கள் உரிமைகளை பெற்று வந்தனர். அத்தகைய 44 சட்டங்களில் 29 சட்டங்கள 4 தொகுப்புகளாக மாற்றப்பட்டு உள்ளன.

இச்சட்டத் தொகுப்புகள் நடைமுறைக்கு வந்தால், 80 சதவீதமான தொழிலாளர்கள் சட்ட வரம்புக்கு வெளியே இருப்பார்கள் என்கிற அபாயமும், அதன் காரணமாக வேலை நீக்கம், ஆட்குறைப்பு, ஆலை மூடல் போன்றவைகளுக்கு அரசின் அனுமதி பெறாமலேயே நடைமுறைப்படுத்த முடியும் என்கிற அபாயமும் உள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டதன் காரணமாக பொது போக்குவரத்து என்கிற அமைப்பு பாதுகாப்பற்றதாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் உள்ளிட்ட17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் கலந்துகொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியான தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் நாளை இயக்கப்படாது என்று தெரிகிறது.

அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள். எனவே குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படலாம் என்று தெரிகிறது.

சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை. வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு இதுவரையில் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

அரசு ஊழியர் சங்கங்களின் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கு அதிகமானோர் பங்கேற்பார்கள் என அனைத்து இந்திய வர்த்தக காங்கிரஸ் நிர்வாகி அமர்ஜீத் கவுர் தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக வங்கித்துறை அறிவித்து உள்ளது. இதைப்போல காப்பீடு துறையும் போராட்டத்தில் இணைவதாக அறிவித்து உள்ளன.

Related Post

ஈரோடு இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பாக 110 புகார்கள் வந்துள்ளன – தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

Posted by - February 16, 2023 0
தேர்தல் விதிமுறைகள் மீறியது தொடர்பாக இதுவரை 110 புகார்கள் வந்துள்ளதாக ஈரோடு தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி  சட்டமன்ற உறுப்பினராக இருந்த…

உதயநிதி அறக்கட்டளைக்கும் நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? – அண்ணாமலை கேள்வி

Posted by - May 29, 2023 0
முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் இதுவரை பதில் வரவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்…

சென்னை மாநகரில் மழை நீர் வடியாததற்கான காரணம்?

Posted by - December 4, 2023 0
சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை…

அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி ராஜா…

Posted by - May 11, 2023 0
மன்னார்குடி எம்.எல்.ஏவும் தி.மு.க ஐ.டி விங் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பதவியேற்றுள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவை…

க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்க? இந்த பொருளோடு சேர்ந்து குடிச்சா உங்க ஆரோக்கியம் செமையா இருக்குமாம்

Posted by - December 25, 2023 0
கோவிட்-19 வகை JN.1 இன் புதிய திரிபு உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது, மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *