அடுத்த 5 நாட்களுக்கு.. – வெதர்மேன் கொடுத்த ஷாக்

184 0

அடுத்த 5 நாட்களுக்கு  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மழைக்கு வாய்ப்பே இல்லை என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில்  வெப்பம் தொடர்ந்து உயர்ந்தே காணப்படும் என்றும்  கன்னியாகுமரி, நீலகிரி, ஊட்டி, வால்பாறை ஆகிய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  வறண்ட நிலை மற்றும் எல் நினோ விளைவு  ஆகியவை இந்த வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மழைக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதீப் ஜான்,  அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் பொழுது தட்பவெட்ப நிலை அப்படியே மாறுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மே மாதம் இரண்டாவது வாரத்திலோ அல்லது மே மாத மத்திய பகுதியில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும்  தெரிவித்தார்.  சென்னை, பாண்டிச்சேரி கடலூர், கடல் காற்று நமக்கு சாதகமாக வரும் இருந்தாலும் அந்த கடல் காற்று தரைப்பகுதிக்கு வருவதற்கு முன்பு இங்கு இருக்கக்கூடிய வெப்பநிலை அதிகமாக இருப்பதால் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அதனால்தான் வெப்பநிலை அதிகமாக இருப்பதை உணர முடிகிறது என்றும் தெரிவித்தார். இதனிடையே அடுத்த 5 நாட்களுக்கு  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Post

அதிகாலையில் வந்த அலர்ட்! அடுத்த 3 மணி நேரம்.. சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை மையம்

Posted by - December 6, 2023 0
சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உட்பட மொத்தம் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் கடந்த…

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: பாமக, நாதக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

Posted by - January 3, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் சென்​னை​யில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. 8-வது…

போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை!

Posted by - November 26, 2024 0
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளளனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள திரையரங்க வாசலில் 3…

சென்னை மக்களை வாட்டி எடுக்கும் புதுவித வைரஸ் காய்ச்சல்

Posted by - February 22, 2023 0
சென்னை: சென்னை மக்களை வைரஸ் காய்ச்சல் ஒன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. சளி மற்றும் வரட்டு இருமலில் தொடங்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியையும் கூடவே…

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் நாளை உருவாகிறது- திங்கட்கிழமை புயலாக மாறும்

Posted by - May 6, 2023 0
சென்னை: தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *