வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் நாளை உருவாகிறது- திங்கட்கிழமை புயலாக மாறும்

194 0

சென்னை:

தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் 3-ந்தேதி புதிய புயல் உருவாகிறது.

இந்த புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் நாளை உருவாகிறது- திங்கட்கிழமை புயலாக  மாறும் | Tamil News Mocha Cyclone low pressure area will develop over the  Bay of Bengal tomorrow

தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் நாளை (7-ந்தேதி) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது 8-ந்தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும்.

இதன் காரணமாக இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று முதல் 9-ந்தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு அந்தமான் கடல், இலங்கை கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் – புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்

Posted by - June 14, 2025 0
நான்தான் உண்மையான விவசாயி எனச் சொல்லி மக்களை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுவதாக, அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். தேர்தலுக்காக எடப்பாடி அவசரகதியில் திட்டங்களை…

கள்ளக்காதல் ஜோடியை திட்டம் போட்டு சிக்க வைத்த வாலிபர்கள்: இளம்பெண் தற்கொலை முயற்சி

Posted by - November 21, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர்…

கஞ்சாவின் தலைநகரமாக மாறிய தமிழகம் – அரசு மீது காட்டம் தெரிவித்த அண்ணாமலை..!!!

Posted by - April 23, 2024 0
தமிழகத்தின் வெவேறு இடங்களில் போதை ஆசாமிகளால் கடந்த மூன்று நாட்களில் நடந்தேறிய கொடூர சம்பவங்கள் தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

சிவாஜி ராவ் டூ சூப்பர் ஸ்டார்.. தமிழகம் கொண்டாடும் ரஜினிகாந்த்.. பிறந்தநாள் ஸ்பெஷல்!

Posted by - December 12, 2022 0
Rajinikanth Birth Day: ரஜினிகாந்த் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழையும் அந்த முதல் காட்சி தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதின் திறவுகோலாகவும் அமைந்தது. 73 வது வயதில்…

எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்..

Posted by - March 7, 2026 0
கடந்த ஓராண்டாகவே மீனாட்சி, புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வாசலில் வாகனம் நிறுத்துவது தொடங்கி, தெருவை கூட்டி சுத்தம் செய்து கோலம் போடுவது வரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *