ரீரிலீசுக்கு காத்திருக்கும் அடுத்த 6 படங்கள்.. எந்தெந்த படங்கள் எப்போது ரீ ரிலீஸ் தெரியுமா?

261 0

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ரீரிலீசாக காத்திருக்கும் 6 படங்கள்.. எந்தெந்த படங்கள் தெரியுமா?தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு சூப்பர் ஹிட் கொடுக்கும் படங்களின் வரவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. குடும்பத்துடன் வந்து கொண்டாடும் படங்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் மலையாளம், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படங்கள் தமிழ் நாட்டில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகிறது. மஞ்சும்மெல் பாய்ஸ், ப்ரேமலு போன்ற படங்கள் தமிழ் நாட்டில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது மலையாளம், தெலுங்கு மொழி படங்களை பார்க்க தொடங்கிவிட்டனர்.

சமீபகாலமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் எந்த தமிழ் படமும் வருவதில்லை, இதனால் திரையரங்குகளுக்கு வரும் மக்கள் வீட்டில் ஓடிடியில் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து குடும்பத்துடன்  பார்த்து மகிழ்கின்றனர். இதனால் தமிழ் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தும் வகையில் தமிழ் படங்கள் தற்போது தியேட்டர்களில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யபடுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளின் பக்கம் ஈர்க்க ஏற்கனவே ரிலீஸ் ஆன ஹிட் கொடுத்த தமிழ் படங்கள் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில், ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களின் வரிசையில் சில நாட்களுக்கு முன்பு 20 ஆண்டுகள் கழித்து விஜய் நடிப்பில் உருவான கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்பி வருகிறது. ரசிகர்கள் கில்லியின் ரீ ரிலீஸை உச்சக்கட்டத்தில் கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகள் முழுவது கான்செர்ட் அரங்கம் போல காட்சியளிக்கிறது. கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியும் கூட,  திரையரங்குகள் இன்றும் ஹவுஸ்புல்லாக தான் இருக்கிறது.

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் 10 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது, இந்த படத்தின் மாபெரும் வெற்றி அடுத்தடுத்த தமிழ் படங்களை ரீ ரீலிஸ் செய்ய தூண்டியுளளது. அந்த வகையில் அடுத்தடுத்து ரீ  ரிலிசுக்கு 6 படங்கள் காத்திருக்கிறது. அதன்படி மே 11 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மங்காத்தா, பில்லா படங்கள் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும், மே 19 ஆம் தேதி விஜய்யின் குஷி படமும், மே 30 ஆம் தேதி கமலின் இந்தியன் படமும் ரீ ரிலிசாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து, 7G ரெயின்போ காலனி, ரன் படங்களும் ரீ ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

விஜய்யால் தவறான பாதைக்கு செல்லும் ரசிகர்கள்.. கண்டித்தவர்களை எதிர்த்து பேசி பதிவு

Posted by - June 27, 2023 0
விஜய் விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருவதை நாம் அறிவோம். இப்படத்தில் இடம்பெறும் நான் ரெடி தான் வரவா பாடல் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது.…

ரஜினிக்கு நோ சொன்ன முன்னணி நடிகர்.. ரூ. 50 கோடி சம்பளத்தை உதறித்தள்ளியது ஏன்

Posted by - June 2, 2023 0
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். ஜெயிலர்…

இரண்டாம் திருமணம் செய்யும் நாகா சைதன்யா.. பெண் குடும்பம் பற்றி வந்த தகவல்

Posted by - September 15, 2023 0
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை பல வருடங்கள் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் பிரிவை…

2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - October 27, 2025 0
2011 தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது தமிழ் சினிமாவில் இருந்து வெளிவரும் படங்கள் ஸ்பெஷலாக அமையும். அப்படி விஜய், சூர்யா மற்றும் ஷாருக்கான் ரசிகர்களுக்கு…

ஒழுங்கா ரூமுக்கு போ.. நயன்தாராவிடம் கடுமையாக நடந்துகொண்ட இயக்குனர்

Posted by - January 31, 2024 0
நடிகை நயன்தாரா #nayanthara #vigneshsivan #pixeltv #pixelmedia #cinema #tamilnews #tamildirector #tamiltrending நயன்தாராவை தமிழ் சினிமா ரசிகர்களை லேடி சூப்பர்ஸ்டார் என தலைமேல் தூக்கி வைத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *