Actor Dhanush

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?

162 0

’’பாஜக-வை கொள்கை எதிரி என பிரகடனப்படுத்தி விஜய் தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடித்திருக்கும் நிலையில், தனுசை பாஜகவில் இணைத்து விஜய்க்கு எதிராக களமிறக்க பாஜக திட்டமிட்டு வருகிறது”

மன்றத்திற்கு புதிய கொடி, ரசிகர்களுடன் சந்திப்பு என திரைத்துறையில் இருந்து அடுத்த அரசியல் பிரவேசத்திற்கு தயாராகி வருகிறார் நடிகர் தனுஷ். இன்று கூட திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து தன்னுடைய அரசியல் அறிவிப்புக்கும் நாள் குறித்திருப்பதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

புதிய கட்சியா? பாஜகவா?

ஆன்மீக அரசியல் என கூறி நடிகர் ரஜினி அரசியல் கட்சித் தொடங்க திட்டமிட்டு, அது நடைபெறாமல் போன நிலையில், அவர் விட்ட இடத்தை ரஜினியின் ஆசியோடு தொடர தனுஷ் திட்டமிட்டிருக்கிறார். அதற்காக தன்னுடைய ரசிகர் மன்றத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் தனுஷ், விரைவில் அரசியல் அறிவிப்பை வெளியிட ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

அதே நேரத்தில் தனிக் கட்சித் தொடங்கி  விஜய், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மாற்றாக இன்னொரு அரசியல் மாற்றத்தை தமிழ்நாட்டில் உடனடியாக உண்டு செய்ய முடியுமா? என்ற சந்தேகமும் தனுஷ்க்கு இருப்பதால், புதிய கட்சித் தொடங்குவதற்கு பதில் பாஜகவில் இணைந்து, தேர்தல் அரசியலை செய்யலமா? எனவும் அவர் தன்னுடைய நெருக்கமான வட்டாரத்தில் பேசி வருவதாக கூறப்படுகிறது.

தனுசை அழைக்கும் பாஜக – முடிவு என்ன ?

அதே நேரத்தில், பாஜக தலைமையும் தனுஷ் அந்த கட்சியில் இணைவதை விரும்புவதாகவும் இது தொடர்பாக தனுஷ் தரப்பிடம் பாஜக தேசிய தலைமையில் இருந்து முக்கிய நபர் ஒருவர் பேசிவருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள பிரபல கணக்காளர் ஒருவர் தனுஷ்க்கு ஆலோசனை வழங்கத் தொடங்கியிருப்பதாகவும் அவரின் வழிகாட்டுதல்படியே தனுஷின் அரசியல் பிரவேசம் இருக்கப்போவதாகவும் தெரிகிறது.

தனிக் கட்சி தொடங்குவதற்கு பதில் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு அடித்தளமாக இருந்த பாஜகவிலேயே இணைந்து, விஜய்க்கு எதிரான அரசியலை தமிழ்நாட்டில் முன்னெடுக்க தனுஷ் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

விஜய்க்கு எதிராக தனுஷ்

பாஜக-வை கொள்கை எதிரி என பிரகடனப்படுத்தி விஜய் தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடித்திருக்கும் நிலையில், தனுசை பாஜகவில் இணைத்து, விஜய்க்கு எதிராக களமிறக்க பாஜக தலைமையும் தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. புதுக் கட்சியா அல்லது பாஜகவா? என்பதை விரைவில் தனுஷ் அறிவிக்கவுள்ளார்.

Related Post

மேடையில் அமித் ஷா அப்படி என்ன சொன்னார்? தமிழிசை அளித்த பதில்

Posted by - ஜூன் 13, 2024 0
ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.…

தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

Posted by - டிசம்பர் 15, 2025 0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…

“கட்சிக்காக பேசினேன்.. நீக்குவார்கள் என எதிர்ப்பார்க்கல!” செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

Posted by - செப்டம்பர் 6, 2025 0
மக்களின் எதிர்ப்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில்  நேற்று வெளிப்படையாக தெரிவித்தேன், கட்சியிலிருந்து நீக்குவதற்கு முன் ஜனநாயக அடிப்படையில் கட்சியிலிருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்றார். கட்சி பொறுப்பில் இருந்து…
vck

ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளையை சீராட்டி வளர்க்க போயிருக்கிறாரா? – திருமாவுக்கு எதிராக விசிகவுக்குள்ளேயே வெடிக்கும் விமர்சனம்

Posted by - மே 24, 2026 0
‘தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை’ என்று விசிக தலைவர் திருமாவளவன் விவரித்திருக்கும் நிலையில், “ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைதான் விஜய்…

விரக்தியில் விஜய்! கூவி கூவி அழைத்தும் கூட்டணிக்கு வராத கட்சிகள்.. மக்களே இனி துணை!

Posted by - ஜூலை 31, 2025 0
நடிகர் விஜய் தன்னுடைய தவெக தலைமையிலான கூட்டணிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தும் யாரும் வராததால் தனித்தே களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன