விரக்தியில் விஜய்! கூவி கூவி அழைத்தும் கூட்டணிக்கு வராத கட்சிகள்.. மக்களே இனி துணை!

208 0

நடிகர் விஜய் தன்னுடைய தவெக தலைமையிலான கூட்டணிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தும் யாரும் வராததால் தனித்தே களமிறங்குவார் என்று கருதப்படுகிறது.

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதமே உள்ளதால் ஒவ்வொரு கட்சியினரும் அதற்கான பணிகளில் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கவும், எதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியை கைப்பற்றவும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

கூட்டணிக்கு கூவி கூவி அழைத்த விஜய் 

ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு நடிகர் விஜய் மீதே அமைந்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது? திரையில் ஜொலித்த விஜய் அரசியலிலும் ஜொலிப்பாரா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் கூட்டணி கட்சிகள் தயவில்லாமல் தேர்தலைச் சந்திப்பது மிகவும் சவாலானது என்பதை உணர்ந்த விஜய், விக்கிரவாண்டியில் நடந்த முதல் அரசியல் மாநாட்டிலே ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். அதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை வெளிப்படையாகவே கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.

மக்கள் மட்டும்தான் துணை:

தவெக-வுடன் கூட்டணி வைக்க விசிக, காங்கிரஸ் என பல கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், இதுவரை எந்த கட்சியும் கூட்டணிக்கு வர தயார் இல்லை என்றே தெரிகிறது. திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ் கட்சிகளும் வரத் தயார் இல்லை என்றே தெரியவந்துள்ளது. விஜய் அரசியல் களத்திற்கு வந்தால் அவருக்கு பக்கபலமாக இருப்பார் என்று கணிக்கப்பட்ட சீமான், விஜய்யை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில், தவெக-வின் செயலி அறிமுக விழாவில் நேற்று பேசிய தவெக தலைவர் விஜய் மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு என்ற அண்ணாவின் கோட்பாட்டை மேற்கோள் காட்டி பேசினார். மேலும், மக்களுடன் மக்களாக இருக்கப்போகிறோம், நாம் இருக்கிறோம், நம்முடன் மக்கள் இருக்கிறார்கள், இதற்கு மேல் என்ன வேண்டும், நல்லதே நடக்கும் என்று பேசியுள்ளார். வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும் எந்த கட்சியினரும் வராத காரணத்தால் விஜய் சற்று விரக்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியள்ளது.

துணைக்கு வரப்போவது யார்?

விஜய்யின் இந்த பேச்சு கூட்டணிக்கு எந்த கட்சியும் வர தயாராக இல்லை என்பதால், மக்களை நம்பியே இந்த தேர்தலில் களமிறங்க வேண்டி உள்ளது என்பதையே காட்டுகிறது. ஏனென்றால், கூட்டணியில் இருந்து பாஜக-வை அதிமுக கழட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி – எடப்பாடி பழனிசாமி சந்திப்புக்கு பிறகு அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்றே தெரிகிறது.

இதனால், திமுக மற்றும் அதிமுக என்ற மாபெரும் பலமிகுந்த கட்சிகளை எதிர்த்து தனியாக களமிறங்குவதை 1967 மற்றும் 77 தேர்தல்களுடன் ஒப்பிட்டு விஜய் பேசியதாகவும் கருதப்படுகிறது. கூட்டணிக்கு பெரிய கட்சிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்க்கு தற்போது வரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அடுத்த 10 மாதத்திற்குள் விஜய்யின் அரசியல் களத்தில் துணையாக ஏதேனும் கட்சிகள் வருமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Related Post

ASDFGH

செம அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! ஏன்?

Posted by - February 17, 2026 0
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வரும் மாணிக்கம் தாகூரால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு…

“தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

Posted by - March 27, 2026 0
சென்னை: “நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த…
Gemini Generated Image mdnoecmdnoecmdno

குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் – பழனிசாமி உறுதி

Posted by - April 9, 2026 0
குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ அதிமுக ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட…
Gemini Generated Image t4hwvit4hwvit4hw

500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

Posted by - March 30, 2026 0
தங்கம், வெள்ளி, பணம், கார்கள்… தவெக தலைவர் விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தவெக தலைவர் விஜயின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி (404,58,57,196)…
Generated Image November 13 2025 10 11AM

சிறுத்தைகளுக்காக சீறிய பொன்முடி! – மீண்டும் புகைய ஆரம்பிக்கும் விழுப்புரம் திமுக விவகாரம்

Posted by - November 13, 2025 0
தேர்​தல் சமயத்​தில் தேவையற்ற மனக்​கசப்​பு​கள் வேண்​டாம் என்​ப​தற்​காகவே முன்​னாள் அமைச்​சர் பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச்​செய​லா​ள​ராக்​கி​னார் ஸ்டா​லின். ஆனால், பொன்​முடிக்​கும் விழுப்​புரம் மத்​திய மாவட்ட திமுக செய​லா​ள​ரான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *