Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி

173 0

Bihar Election 2025 Result: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சி எத்தனை இடங்களை கைப்பற்றியுள்ளன என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Bihar Election 2025 Result: பீகாஎர் சட்டமன்ற தேர்தல் முடிவில் பாஜக, அந்த மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

என்டிஏ கூட்டணி அமோக வெற்றி:

தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி, பரபரப்புக்கு மத்தியில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 243 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெல்லப்பட்டன. அதில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் சொன்னதுபோலவே, பாஜக மற்றும் நிதிஷ்குமார் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், யாரும் எதிர்பார்க்காத வகையில் 200-க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாஜக மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்து ஆச்சரியமளித்துள்ளது.

எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?

என்டிஏ கூட்டணியின் பிரதான கட்சிகளான பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இந்த தேர்தலில் தலா 101 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில், பாஜக 89 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நிதிஷ்குமார் கட்சி 75 இடங்களிலும், பாஜக 74 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி 28 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் வெற்றி பெற்று பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜித்தம் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி ஆவம் மோர்ச்சா 5 தொகுதிகளிலும், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் நிலை என்ன?

சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என கருதப்பட்ட நிலையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அடங்கிய கூட்டணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த கூட்டணி 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. குறிப்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 இடங்களிலும், 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 இடங்களிலும், இடதுசாரிகள் 3 இடங்களிலும் மற்றும் இந்திய ஒருங்கிணைந்த கட்சி ஒரே ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி 110 இடங்களை வென்று இருந்த நிலையில் தற்போது அது வெறும் 35 இடங்களாக சுருங்கியுள்ளது.

சர்ப்ரைஸ் தந்த ஓவைசி

தேர்தல் அறிவித்த உடனே எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைய அசாதுதின் ஓவைசி விருப்பம் தெரிவித்தார். ஆனால், தேஜஸ்வி யாதவ் அதனை விரும்பவில்லை. இதையடுத்து 25 தொகுதிகளில் தனித்து வேட்பாளர்களை களமிறக்கியது. அதன் முடிவில் 5 இடங்களில் வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளது. கூட்டணி அமைத்து களம் கண்ட காங்கிரஸால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே கூடுதலாக வெற்றி பெற முடிந்துள்ளது.பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு ஓவைசி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பிரித்த ஓட்டுகளே காரணம் என கூறப்படுகிறது. இதுபோக பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கட்சி வாரியாக வெற்றி பெற்ற இடங்கள்:

  • பாஜக – 89 தொகுதிகள்
  • ஜேடியு – 85 தொகுதிகள்
  • ஆர்ஜேடி – 25 தொகுதிகள்
  • எல்ஜேபிஆர் – 19 தொகுதிகள்
  • காங்கிரஸ் -6தொகுதிகள்
  • எச்எஎம் – 5 தொகுதிகள்
  • ஓவைசியின் கட்சி – 5 தொகுதிகள்
  • ஆர்எல்எம் – 4 தொகுதிகள்
  • இடதுசாரிகள் – 3 தொகுதிகள்
  • IIP, BSP – 1 தொகுதி

Related Post

ஆந்திராவில் களை எடுக்கும் போது விவசாய நிலத்தில் கிடைத்த வைர கற்கள் லட்சாதிபதியான பெண் கூலி தொழிலாளி

Posted by - July 17, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தேன் நிறத்திலான கல்…

நெய் சுத்தமானதா..? கலப்படமானாதா..? எளிதில் கண்டறிய உதவும் டிப்ஸ் இதோ

Posted by - September 21, 2024 0
நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3…

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

Posted by - August 20, 2025 0
புதுடில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.15வது துணை ஜனாதிபதியை…

’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!

Posted by - December 1, 2025 0
’சிபி ராதாகிருஷ்ணன் முதன்முறையாக மாநிலங்களவை சபாநாயகராக அவையை நடத்தவுள்ள நிலையில், தமிழ்நாடு சார்ந்த பிரச்னைகளை அவர் எப்படி கையாளப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது’ நாடாளுமன்ற குளிர்கால…

மணிப்பூரில் மீண்டும் இணைய சேவைகளுக்கு தடை

Posted by - September 27, 2023 0
இம்பால்: மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *