vijay.ng

’உணர்வுப்பூர்வமான பிரச்னை’ மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் விஜய்..!

56 0

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைக் கட்ட தொடர்ந்து தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், அந்த மாநில அரசின் திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டுவந்தார் முதல்வர் விஜய்.

தீர்மானத்தில் இருப்பது என்ன?

முதல்வர் விஜய் முன்மொழிந்த தீர்மானத்தில் ”காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் உணர்வுபூர்வமான பிரச்னை – முதல்வர் விஜய்

காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும் படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது. காவிரிப் பிரச்சினை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாகும். ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது” என அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

Related Post

dmk cong

திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்

Posted by - May 24, 2026 0
DMK Cong: மதச்சார்பற்ற கட்சி என முகமூடியை அணிந்துகொண்டு திமுக நாடகமாடுவதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் (Manickam Tagore) குற்றம்சாட்டியுள்ளார். DMK Cong: பாஜக உடன்…

த.வெ.க.வை கண்டு பயத்தின் உச்சத்தில் தி.மு.க. – விஜய் கடும் விமர்சனம்

Posted by - September 9, 2025 0
வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட…

”உதயநிதி படத்தை பார்க்க சொல்லாதீங்க” விஜய்யின் வாரிசு படம் குறித்து மறைமுகமாக பேசிய அண்ணாமலை!

Posted by - December 12, 2022 0
தூங்குவது முதல் காலை எழுவது வரை திராவிட மாடல் என்று முதல்வர் கூறி வருவதாக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றால் ஆக்கிவிடுங்கள்…
Generated Image January 07 2026 5 03PM

அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு

Posted by - January 18, 2026 0
ACTO-GEO அமைப்பு 2021 தேர்தலின்போது தி.மு.க தேர்தல் வாக்குறுதியின்படி அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி , பிப்.3 முதல் காலவரையறை அற்ற வேலை நிறுத்தப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *