CM ஸ்டாலினை ரவுண்டு கட்டிய சீமான்…

115 0

 முதலமைச்சர் மோசமான நிர்வாகத்தை கொண்டிருப்பதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

Seeman Slams CM Stalin: அரசு மருத்துவமனைகளில் தொடரும் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு அரசை சீமான் வலியுறுத்தியுள்ளார்.

செயல்படாத திருத்தணி அரசு மருத்துவமனை:

கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, மாவட்ட மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதே ஆண்டு சட்டப்பேரவையில் திருத்தணி அரசு பொது மருத்துவமனையைத் தரம் உயர்த்த 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தீர்மானமும் நிறைவேற்றி, ஒப்பந்தமும் விடப்பட்டது. இதற்கிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு அமைந்த பிறகு கடந்த ஏப்ரல் மாதம் காணொளிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் ஸ்டாலினால் தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி மருத்துமனை திறந்து வைக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின்வசதி இல்லாத காரணத்தால் இன்னும் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாத மருத்துவமனை யாருக்காக? எதற்காக? தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு வழங்குவதாக அறிவித்த 45 கோடி என்னானது? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

”உயிரோடு விளையாடும் அரசு”

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், புதிதாகத் தொடங்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என்பது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகும். வெற்று விளம்பரத்திற்குத் தரம் உயர்த்துவதாக வெற்று அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு, மருத்துவமனைகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளைக் கூடத் திமுக அரசு நிறைவு செய்யாதிருப்பது கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் உயிரோடும், உடல் நலனோடும் விளையாடும் கொடுஞ்செயல்” என சாடியுள்ளார்.

”ஜிப்மருக்கு செல்லும் அவலம்”

விழுப்புரம் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதியோ, மருத்துவர்கள் நியமனமோ செய்யப்படாத காரணத்தால் பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு இயங்கி வருவது அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். அதன்காரணமாக விழுப்புரம் சுற்றுவட்டார மக்கள் பாண்டிச்சேரி மாநிலத்திலுள்ள ஜிப்மர் மருத்துவமனைக்குப் போகச்சொல்லி அலைகழிக்கப்படுவதும், இதுகுறித்துப் பலமுறை பொதுமக்கள் புகாரளித்தும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை என கடுமையாக விமர்சித்துள்ளார்.

பணியாளர்கள் பற்றாக்குறை:

தமிழ்நாட்டில் ஏற்கனவே இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரிகள் வரை போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, மருந்துகள் இல்லை, மருத்துவ உபகரணங்கள் இல்லை, படுக்கை வசதி இல்லை என்பதால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிவரும் நிலையில், தரம் உயர்த்தப்பட்ட மருத்துமனைகளும் அதைவிட மிக மோசமான நிலையிலிருப்பது ஏற்க முடியாத பெருங்கொடுமை என சீமான் எச்சரித்துள்ளார். இத்தனை மோசமான நிர்வாகத்தை வைத்துக்கொண்டு ‘இந்தியா வியக்கும் திராவிட மாடல், உலகம் வியக்கும் நான்காண்டு சாதனை’ என்று திமுக அரசு பேசுவது வெட்கக்கேடானது என விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு அரசு, தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையில் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தந்து மக்கள் பயன்பாட்டிற்காக விரைந்து இயங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், விழுப்புரம் மருத்துவக் கல்லூரி உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக்கல்லூரிகள் வரை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் பற்றாக்குறையைப்போக்கி, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டு மக்களின் உயிர்காக்க உடனடி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பாப்பாக உள்ளது.

Related Post

சர்க்கரை நோயாளிகள்.. எந்த எண்ணெய்யை சமையலுக்கு யூஸ் பண்ணலாம்? நீரிழிவு நோயாளிக்கேற்ற எண்ணெய் இதுவா?

Posted by - November 29, 2023 0
சென்னை: நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதிலேயே பல குழப்பங்களு வந்துவிடும் நிலையில், என்ன எண்ணெய்யை சமைக்கலாம் என்பதில் அதற்கு மேல் குழப்பங்கள் உள்ளன. சர்க்கரை…
storm 1

சென்னையை நெருங்கும் மிச்சாங் புயல்: வெளுத்து வாங்கும் மழை- பரங்கிமலை மெட்ரோ மூடல்

Posted by - December 4, 2023 0
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் மிச்சாங் புயலாக உருவானது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை…

இந்து மக்கள் – திருமாவளவன் ஆவேசம்

Posted by - January 24, 2024 0
இந்திய நாடெங்கும் ஜாதி, மதத்தின் பெயரால் வன்முறை கொடுமைகள் தலை விரித்தாடி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் அப்பாவி இந்து மக்கள்…

இன்று அனைத்துக் கட்சி கூட்டம் – சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?

Posted by - March 5, 2025 0
இன்றை அனைத்துக் கட்சி கூட்டத்தில், தொகுதி மறுவரயறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. அனைத்துக் கட்சி கூட்டம்: சென்னை தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது…

போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை!

Posted by - November 26, 2024 0
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தால், சிறுவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளளனர். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள திரையரங்க வாசலில் 3…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *