திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை கும்பலை பிடிப்பதில் போலீசாருக்கு திடீர் சிக்கல்

331 0

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் எந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் கொள்ளையடித்தனர். கொள்ளை கும்பலை கைது செய்வதற்காக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.பெரம்பூர் கொள்ளைக்கும் திருவண்ணாமலை கொள்ளைக்கும் தொடர்பா? - விசாரணையை  தீவிரப்படுத்திய காவல் துறை | perambur related to thiruvannamalai atm  robbery police intensified ...

அரியானா, குஜராத், கர்நாடகா மாநிலம் உட்பட பல பகுதிகளில் அதிரடி வேட்டை நடத்தினர். கடந்த 7 நாட்களாக போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆஜாத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த கொள்ளையில் மேலும் 6-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் ரூ.70 லட்சம் பணத்தை அவர்கள் பதுக்கி வைத்துள்ளனர்.

கைதான இருவரையும் வருகிற 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திருவண்ணாமலை டவுன் போலீசார் முடிவு செய்தனர்.

அதற்காக திருவண்ணாமலை கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்தனர். காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின்னரே மீதமுள்ள கொள்ளையர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் ரூ.70 லட்சம் பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்கள் வெளிவரும். கொள்ளை நடந்து 7 நாட்களாகியும் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மற்றவர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தொடர்ந்து தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கொள்ளை கும்பலை சேர்ந்த மேலும் 3 பேர் அரியானா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு முகாமிட்டுள்ள தனிப்படை போலீசார் அவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியானா, ராஜஸ்தான் மாநில எல்லைப் பகுதியில் மாடு திருடிய 2 பேரை காரில் வைத்து அப்பகுதி மக்கள் தீவைத்து எரித்து கொலை செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் அரியானா மாநிலத்தில் பதுங்கி உள்ள கொள்ளையர்களை பிடிப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Post

பாடசாலையா? பாலியல் குற்றவாளிகள் கூடாரமா? பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! கொதிக்கும் ஈபிஎஸ்

Posted by - December 26, 2024 0
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? இந்த ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- ஈபிஎஸ். தமிழ்நாட்டின் பெருமைமிகு…

ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்! தட்டிக்கேட்ட வழக்கறிஞரை அடித்து துவைத்த விசிகவினர்!

Posted by - October 8, 2025 0
சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை விசிகவினர் சரமாரியாக தாக்கினார்கள். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். விடுதலை…

இன்னும் 2 ஆண்டுகளில் சந்திரயான்-4 ஏவப்படும்: நிலவில் உள்ள மணல், கற்களை பூமிக்கு எடுத்துவர புதிய திட்டம்

Posted by - November 22, 2023 0
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அடுத்த கட்டமாக…

வேட்டையன் திரைவிமர்சனம்…

Posted by - October 10, 2024 0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தூத்துக்குடி செல்கிறார்: இன்று மத்திய குழு ஆய்வு செய்கிறது

Posted by - December 20, 2023 0
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *