tn

CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?

132 0

DMK and AIADMK boycotted : முதலமைச்சர் விஜய் தலைமையிலான திமுக எம்பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளது. அந்த வகையில் மொத்தமுள்ள மக்களவை மற்றும் மாநிலங்களை எம்பிக்களில் 37 பேர் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். 20 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொகுதி மறுவரை- எம்பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு

தமிழகத்தில் தவெக தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில்,  முதலமைச்சர் விஜய்க்கு சிக்கலாக அமைந்தது காவிரி நீர் பிரச்சனை, கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பும் நிலையில் இருந்த போதும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்தது. மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டவும் கர்நாடக அரசு திட்டமிட்டது. ஆனால் இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட பிரதான எதிர்கட்சியாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் இதனை தவெக அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது.

காவிரி பிரச்சனை – அனைத்து கட்சி கூட்டம்

அதே நேரம் கர்நாடகாவிற்கு சென்று காவிரி நீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் திட்டமிட்ட நிலையில், அங்கு சூழ்நிலை சரியில்லை கர்நாடகம் வரவேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் சிவக்குமார் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தொகுதி மறுவரை தொடர்பாக ஆலோசிக்க தமிழகத்தில் உள்ள எம்பிக்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்தார். அந்த வகையில் இன்று மாலை 3 மணிக்கு கலைவாணர் அரங்கில் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லையென திமுக அறிவித்துள்ளது .

தொகுதி மறுவரை கூட்டம்- புறக்கணிக்கும் 37 எம்பிக்கள்

அரசியலுக்காக இந்த கூட்டத்தை தவெக நடத்த இருப்பதாகவும், தற்போது தொகுதி மறுவரை தொடர்பாக எந்த முடிவும் மத்திய அரசு எடுக்காத நிலையில் இந்த கூட்டம் ஏன் எனவும் கேள்வி எழுப்பியது. எனவே இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்காது என கனிமொழி தெரிவித்துள்ளார்.  இதே போல அதிமுகவும் கலந்து கொள்ளாது என தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி கட்சியான தேமுதிகவும் முதலமைச்சர் விஐய் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என தெரிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யமும் கூட்டத்தை புறக்கணித்துள்ளது. மேலும் பாமகவும் கூட்டத்தில் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.

யாரெல்லாம் கலந்து கொள்வார்கள்

அதே நேரம் தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும 3 ராஜ்யசபா உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தையின் 2 மக்களவை உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலா 2 மக்களவை உறுப்பினர்கள், மதிமுகவின் ஒரு மக்களவை எம்பி, முஸ்லிம் லீக் கட்சியின் ஒரு எம்பி  மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 37 எம்பிக்கள் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில், 20 எம்பிக்கள் மட்டும் கலந்துகொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

மனசாட்சி இருந்தால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற செய்தியை வெளியிட்டிருக்க மாட்டார் – வானதி சீனிவாசன் கண்டிப்பு..!!

Posted by - மே 7, 2024 0
போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் திமுகவை விட பாஜகவை கடுமையாக விமர்சிப்பவர். திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறைக்கு வலுவான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக பாஜக…
arunips

ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ். யார் இந்த மகேஷ்வரி?

Posted by - ஜூலை 14, 2026 0
DVAC ARUN IPS: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக இருந்த அருண் ஐபிஎஸ் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. DVAC ARUN IPS: திமுகவிற்கு நெருக்கமான…

விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

Posted by - டிசம்பர் 29, 2023 0
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.  மறைந்த கேப்டன் விஜயகாந்த்…

இன்று கரையை கடக்கும் மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களில் அதிகனமழை கொட்டும் – வானிலை மையம் அலெர்ட்

Posted by - டிசம்பர் 9, 2022 0
Cyclone Mandous | திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.…
தமிழகத்தில் பருவமழை தீவிரம் காரணமாக மழை பெய்யும் காட்சி

தமிழகத்தில் நவ.23 முதல் பருவமழை தீவிரம்

Posted by - நவம்பர் 21, 2026 0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவது குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த பருவமழை தீவிரம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன