cm vijay 2

CM Vijay: நெற்றியில் கருப்பு பொட்டு.. ஸ்டைலாக கருப்பு கோட்-சூட்.! விஜய்யின் சீக்ரெட் சென்டிமென்ட் என்ன தெரியுமா.?

109 0

CM Vijay: தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர் அணிந்து வரும் கருப்பு கோட்- சூட், நெற்றியில் கருப்பு பொட்டிற்கான ரகசியம் என்ன.? என்பதை தற்போது பார்க்கலாம்.

அரசியலில் அசத்திய விஜய்

தமிழ் திரைத்துறை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் மீது அதிக ஈடுபாடு கொண்டவதாக இருந்தவர் இதற்கு ஏற்றார் போல தனது திரைப்படங்களிலும்  வசனங்களை இடம்பெற செய்தார். இதனையடுத்து கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என செயல்பட்டார். 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதனையடுத்து விஜய் செல்லும் இடமெங்கும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கூடினார்கள்.

 பாரம்பரியத்தை உடைத்த விஜய்

இந்த நிலையில் தான் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்துள்ளார் விஜய். அந்த வகையில் கடந்த 10ஆம் தேதி பதவியேற்ற விஜய், தமிழக அரசியல் தலைவர்கள் எப்போதும் அணிந்து வரும் வெள்ளை வேட்டி சட்டை என்ற பாரம்பரியத்தை உடைத்து  கருப்பு கோட்-சூட் அணிந்து ஸ்டைலாக பங்கேற்றார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அடுத்தடுத்த தினங்களிலும் சட்டசபை நிகழ்வுகள் மற்றும் அரசு அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டத்திலும் கருப்பு கோட் மற்றும் கருப்பு பொட்டுடனே விஜய்  கலந்து கொண்டார்.

கருபுப கோட்- சூட் ரகசியம் என்ன.?

இதனையடுத்து முதலமைச்சர் விஜய்யின் இந்த ஆடை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. குறிப்பாக விஜய் கடந்த சில வருடங்களாக ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை உடையவராக இருந்து வருகிறார். இதற்கு ஏற்றார் போல அவரது ஜோதிடருக்கு அரசு பதவியும் வழங்கினார். ஆனால் இதற்கு எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அரசு பதவி அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் கருப்பு கோட்-சூட் அணிவது ஜாதக ரீதியாக அணிவதாக கூறப்பட்ட நிலையில், கருப்பு நிறம் என்பது அதிகாரம், ஆளுமை, தன்னம்பிக்கை, தனித்துவத்தை குறிப்பதாகவும் இதன் அடையாளமாகவே விஜய் கருப்பு கோட் சூட் அணிவதாகவும் தகவல் வெளியானது. விஜய்யின் இந்த கருப்பு கோட் சூட்டை பிரபல ஆடை வடிவமைப்பளரான சபீர் அகமது வடிவமைத்துள்ளதாகவும், இந்த ஒரு கோட் சூட்டின் விலைரூ.40,000 முதல் ரூ.70,000 வரை  இருக்கும் என கூறப்படுகிறது.

கருப்பு பொட்டு சென்டிமென்ட் .?

இந்த நிலையில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து தனது நெற்றியில் கருப்பு பொட்டுடன் காட்சி அளித்து வருகிறார். இதற்கான ரகசிய பின்னனி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விஜய்யின் நெற்றில் இருக்கும் கருப்பு பொட்டை அரகஜா திலகம் என கூறப்படுகிறது. அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் அரகஜா பொட்டை அதிகளவு வைப்பார்கள். இந்த  அரகஜா திலகம் ஜவ்வாது,பச்சை கற்பூரம், புனுகு, வெட்டிவேர் ஆகியவற்றுடன் அரிய வகை மூலிகைகள் மற்றும் நறுமண பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது.

இந்த அரகஜா திலகத்தை ஆன்மிகம் மற்றும் ஜாதகத்தை அதிகளவு  நம்புபவர்கள் இந்த பொட்டை பயன்படுத்துகிறார்கள். இந்த அரகஜா திலகம் வாழ்வில் ஏராளமான மாற்றங்கள், வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நெற்றியில் திலகமாக வைத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தான் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய்யும் தனது நெற்றியில் அரகஜா திலகத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

தமிழ்ப் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Posted by - April 14, 2024 0
சித்திரை மாதம் முதல் நாள், தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோப கிருது ஆண்டு விடைபெற்று, ‘குரோதி’ புத்தாண்டு பிறந்துள்ளது. உலகம்…

இனி இவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Posted by - March 16, 2024 0
அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் புதிய…

நடிகர் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லையா? என்ன ஆனது

Posted by - December 31, 2024 0
தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இன்று உலகளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார் தனுஷ் இதில் இவர் இயக்கி வரும் 4வது திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தில் நித்யா…

“மயிலாடுதுறையில் நான் போட்டியிடவில்லை” – பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் கூறியது என்ன? – MaKa Stalin

Posted by - March 25, 2024 0
 PMK Candidate: சிலர் 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என கனவு காணுகிறார்கள் என மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குற்றம்…

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் 44 பேர் கைது

Posted by - November 9, 2023 0
புதுடெல்லி: வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளனர். அவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *