Magalir Urimai Thogai

Magalir Urimai Thogai: மகளிர்களுக்கு 2500 ரூபாய் எப்போது வழங்கப்படும்.? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்

97 0

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த அறிவிப்பு எப்போது செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமை தொகை கிடைக்குமா.?

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக, மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் வழங்கி வந்தது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமா.? என்ற கேள்வி எழுந்தது. இதே போல திமுக அரசு சார்பாக கடந்த ஆட்சியின் போது தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டங்களின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. எனவே தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில்,  இந்த திட்டங்கள் தொடருமா.? அல்லது நிறுத்தப்படுமா.? என எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் நேற்று தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்கள் தொடரும் என அறிவித்தார்.

மாணவர்கள் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய்

இந்த நிலையில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ் புதல்வர் திட்டத்தின் கீழ் இன்று மாணவர்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. மேலும் மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் நாளை அல்லது நாளை மறுதினம் வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது. இதற்கிடையே தவெகவின் தேர்தல் வாக்குறுதியான 2,500 ரூபாய் எப்போது வழங்கப்படும் என தமிழக மகளிர் ஆவலோடு எதிர்பார்த்து  காத்துள்ளனர்.

மகளிர்களுக்கு 2,500 ரூபாய்- கால அவகாசம் தேவை

இந்த நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள உத்தரவில், மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்  என தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளவர், மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்  உத்தரவிட்டுள்ளார்.

Related Post

நீண்ட இழுபறிக்கு பின் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

Posted by - March 27, 2024 0
மயிலாடுதுறை தொகுதியை குறி வைத்து மணிசங்கர் அய்யரின் மகள், ராஜ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்பட்டது. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர்…
tvk vck

பனையூரை நோக்கி மக்கள் நலக் கூட்டணி? சிக்னல் கொடுத்த காங்., திருமா, கம்யூ.,? விஜயின் அமைச்சரவை ரெடி?

Posted by - May 5, 2026 0
TVK Vijay TN Election 2026: தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளிக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. TVK…

”அறம் எங்கே வெல்லும்…” – வைரலாகும் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் ட்வீட்

Posted by - January 24, 2023 0
அதற்கேற்ப காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். சினிமா, அரசியல், பிக்பாஸ் என நடிகர் கமல்ஹாசன் பரபரப்பாக…
tvk cm e1777981664118

Vijay Swearing-In: ”ஜோசப் விஜய் ஆகிய நான்” முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!

Posted by - May 5, 2026 0
Vijay Swearing-In Ceremony: தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் பதவியேற்பு எப்போது? எங்கே? தேதி குறித்த தவெக! தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் (மே 7ஆம் தேதி) முதலமைச்சராகப்…
eps cvs

CV Shanmugam:அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?

Posted by - May 23, 2026 0
அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், சிவி சண்முகம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பதில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப்பொறுப்பேற்று ஒரு மாதங்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *