Breaking News Tamil Political Showdown

நாங்க அடிமை இல்லை.. திருப்பி அடிப்போம்.. உதயநிதி திமுகவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கடும் எச்சரிக்கை!

125 0

உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசியல் விவாதத்தைத் தொடர்ந்து இத்தகைய தரம் தாழ்ந்த மொழிக்குக் கொண்டுசெல்வது தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டுக்கு நல்லதல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

தமிழ்நாடு அரசியலில் மீண்டும் திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே உச்சக்கட்ட வார்த்தை மோதல் நிலவி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என காணலாம்.

மாணிக்கம் தாகூர் ட்வீட் விமர்சனம்

திமுக தோல்விக்கு ஊழல், சட்டம் ஒழுங்கு சீரழிவு, பெண்களைப் பற்றி தவறாகப் பேசிய பேச்சுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம்தான் காரணம் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையான விமர்சனம் ஒன்றை தெரிவித்தார். தேர்தலுக்கு முன், பின் எஸ்.ஐ.ஆர் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஆதாரத்தை சுட்டிக்காட்டி, உங்கள் கட்சி தோற்க எஸ்.ஐ.ஆர். காரணம் இல்லை. மேற்கூறிய அனைத்தும் என தெரிவித்திருந்தார். இது திமுக தலைமையை சூடாக்கியது. பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தரப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டனர்.

அதில், “அடிமை, கால் அமுக்கி, புல்லுருவிகள், அழுகிய சடலங்கள், பதவிப்பிச்சை, சூடு சொரணை, தொடைநடுங்கி, வார்த்தை வாந்தி, பக்கா பொடிமாஸ், அட்டைப்பூச்சி, பிஸ்கட்டுக்காகப் பேசவேண்டாம்” என பல வார்த்தைகளைப் பயன்படுத்தி மாணிக்கம் தாகூரை திமுக வசைபாடி விமர்சித்திருந்தது.

தரம் தாழ்ந்த அரசியலுக்கு பதிலடி

உதயநிதி திமுக வின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பதில் என வெளியாகியுள்ள பதிவில், “SIR குறித்த கேள்விகளுக்கு உண்மைகளால் பதிலளிக்க முடியாதபோது, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவதும், “வாயை அடக்க வேண்டும். இல்லையென்றால் அடக்கப்படும் என்று வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுவது ஏன்? இந்தப் பேச்சுக்கெல்லாம் அஞ்சுபவர்களா காங்கிரஸ்காரர்கள்?அரசியல் விவாதத்தை இவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் என்ன?

முதலில், SIR குறித்த காங்கிரஸின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளுங்கள். எங்கெல்லாம் தேர்தல் முறைகேடுகள் குறித்த உறுதியான, தீர்மானகரமான ஆதாரங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் மறுதேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் சூழல்களையும், பீகார், மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் எழுந்துள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களை ஆராயாமல் ஒன்றாகச் சேர்த்துப் பேசுவது சரியான அணுகுமுறை அல்ல. ஆதாரங்கள் எங்கே இருக்கின்றனவோ, நடவடிக்கையும் அங்கே இருக்க வேண்டும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை உண்மையாகச் சித்தரிக்கக் கூடாது.

திமுகவின் இரட்டை நிலைப்பாடு

SIR நடவடிக்கையின்போது திமுக தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு உதவியதையும், வாக்குகளைப் பாதுகாக்கக் களத்தில் பணியாற்றியதையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். அந்தப் பணியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. தொண்டர்களின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது தான்.  ஆனால், அதே நேரத்தில், அந்தப் பணியைச் சுட்டிக்காட்டி SIR தொடர்பான மோசடிகள் எதுவும் தமிழ்நாட்டில் நடைபெறாமல் திமுக தடுத்துவிட்டதாகக் கூறினார்.

அன்று தொண்டர்களின் உழைப்பைப் பாராட்டியபோது SIR குறித்து ஒரு நிலைப்பாடு. இன்று கேள்வி எழுப்பப்படும்போது வேறொரு நிலைப்பாடா? இதைத் தெளிவுபடுத்த வேண்டியது திமுகவின் பொறுப்பு. இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக ஏன் இவ்வளவு கோபம்? ஏன் இவ்வளவு ஆபாசமான தனிநபர் தாக்குதல்கள்? ஏன் வன்முறைப் பேச்சு? இந்த மிரட்டல்களுக்கு மாணிக்கம் தாகூர் பயந்தவர் அல்ல. திருப்பி அடிக்க தெரிந்தவர்.

கருத்துக்குக் கருத்தால் பதிலளியுங்கள். உண்மைக்குப் பொய்யால் பதிலளிக்காதீர்கள். காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளுடன் உடன்படவில்லை என்றால், ஆதாரங்களை முன்வைத்து விவாதியுங்கள். ஆனால், அரசியல் விமர்சனத்தைத் தனிப்பட்ட அவதூறாக மாற்றுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உதயநிதி திமுகவுக்கு நல்லதல்ல

உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசியல் விவாதத்தைத் தொடர்ந்து இத்தகைய தரம் தாழ்ந்த மொழிக்குக் கொண்டுசெல்வது தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டுக்கு நல்லதல்ல. தமிழக காங்கிரஸ் யாருக்கும் அடிமையல்ல. எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் எழுப்பும் கேள்விகளுக்குபதில் சொல்ல வேண்டுமே தவிர, அவரை மிரட்டலாம் என்று கற்பனை செய்வது மூலமாகவோ, இழிவுபடுத்துவதன் மூலமாகவோ உண்மையின் குரலை அடக்கிவிட முடியாது.

ஜனநாயகத்தைக் காப்பது எங்கள் கடமை. ஒவ்வொரு தகுதியான குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாப்பது எங்கள் உறுதியான நிலைப்பாடு. உண்மைகளைப் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது.திமுகவுக்கு மீண்டும் கேட்கிறோம்: உண்மைகளை எதிர்கொள்ளத் தயாரா? அல்லது கேள்வி கேட்பவர்களை தனிநபர் தாக்குதல் மற்றும் ஆபாசப் பேச்சின் மூலமாக மௌனமாக்க முடியும் என்று நினைப்பது தான் உங்கள் அரசியலா?” என பதிலடி கொடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Post

மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு விஜய் மாநாட்டுக்குப் போனார்களா? – திமுகவுக்கு புளியை கரைக்கும் புள்ளிவிவரம்!

Posted by - அக்டோபர் 11, 2025 0
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற…
Generated Image January 23 2026 11 16AM

இன்று தமிழகம் வரும் மோடி.!

Posted by - ஜனவரி 23, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே…

“விஜய் வேடிக்கை மட்டும் பார்த்தால் எப்படி?”

Posted by - டிசம்பர் 17, 2025 0
புதுச்சேரி: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வளவு பிரச்சினைகள், சண்டைகள் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தால், உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள்? அதனால் தவெக தலைவர் விஜய்…
aiamk

அதிமுகவில் கலகம் :காரணம் லீமா ரோஸ் மார்ட்டீன்….

Posted by - மே 12, 2026 0
லீமா ரோஸை லெஃப் ரைட் வாங்கிய எடப்பாடி! சென்னை: தமிழகத்தின் அடுத்த அரசை அமைக்கப் போவது விஜய் தான் என்பது உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் ஆட்சி அமைக்க…
thumbinal

நான் முதலமைச்சரானால்! #விஜய்

Posted by - பிப்ரவரி 23, 2026 0
2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன