Gpay அதிகம் பயன்படுத்துபவரா… இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்

260 0

#pixeltv #pixelmedia #facebook #instagram #gpay #googlepay #truecaller #screencast #tamiltrending #tamilnews #tamiltrending

கூகுள் பே-ல் பண பரிவர்த்தனை செய்யும்போது  செயலிகளை பயன்படுத்த கூடாது என்று கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

UPI ட்ரான்ஸாக்ஷன்களை பொறுத்தவரை, கூகுள் பே (Google Pay)  மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான செயலியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இது மக்களிடையே அதிக அளவில் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த அளவிலான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கூகுள் பே செயற்கை நுண்ணறிவு  மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது போன்ற நடவடிக்கைகள் மூலமாக அன்றாடம் நடைபெறக்கூடிய மோசடி ட்ரான்ஸ்ஷாக்ஷன்களை கூகுள் பே அடையாளம் காண்கிறது.

எனினும் இது எல்லா நேரத்திலும் பயன்படாது. உதாரணமாக ஒரு சில நிகழ்வுகளில் மோசடிக்காரர்கள் உங்களது வங்கி விவரங்களை பெறுவதற்காக ஸ்கிரீன் ஷேரிங் போன்ற ஒரு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம். கூகுள் பே பயன்படுத்தி ட்ரான்சாஷன்களை செய்யும் போது இது போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என யூசர்களுக்கு கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன்கள் என்பவை யாவை அதன் மூலமாக நமக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் என்னென்ன?

இது போன்ற அப்ளிகேஷன்கள் நமக்கு பணி சூழலில் தொலைதூர உதவி மற்றும் ஒத்துழைப்பை வழங்கினாலும் இவற்றை இன்ஸ்டால் செய்வதனால் பல நேரத்தில் நாம் ஏமாந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யூஸர்கள் இதனை பயன்படுத்தும் போது அதன் மூலமாக வங்கி விவரங்களை மோசடிக்காரர்கள் பெறுகின்றனர்.

“கூகுள் பே ஒருபோதும் பயனாளர்களை தேர்ட் பார்ட்டி செயலிகளை எந்த ஒரு காரணத்திற்காகவும் பதிவிறக்கம் செய்யவோ, இன்ஸ்டால் செய்யவோ சொல்லாது. ஒருவேளை நீங்கள் கூகுள் பே  பயன்படுத்துவதற்கு முன்பு இது போன்ற செயலிகளை ஏற்கனவே டவுன்லோட் செய்திருந்தால் அவற்றை செல்போனில் இருந்து அழிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்,” என்று கூகுள் கூறுகிறது.

“யாரேனும் உங்களிடம் கூகுள் பே ரெப்ரசன்டேட்டிவ் போல பேசி இந்த அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்ய சொல்லி, நீங்கள் அதனை டவுன்லோட் செய்திருந்தால் உடனடியாக அவற்றை அழித்து விடுங்கள். இது குறித்து நீங்கள் கூகுள் பே-ல் புகாரையும் பதிவு செய்யலாம்,” என்றும் கூகுள் கூறுகிறது.

ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன்கள் மற்றவர்களின் ஸ்கிரீனில் என்ன நடக்கிறது என்பதை காணவும், அந்த சாதனத்தின் கட்டுப்பாட்டை எடுக்கவும் கூட பயன்படுத்தப்படலாம். எனவே உங்களது அனுமதி இல்லாமல் இது போன்ற அப்ளிகேஷன்களை மோசடிக்காரர்கள் இன்ஸ்டால் செய்யும்படி ஏமாற்றலாம். நீங்கள் UPI பின் நம்பரை என்டர் செய்யும் பொழுது பின் நம்பர் என்ன என்பது மோசடிக்காரர்களுக்கு தெளிவாக தெரிந்து விடும். அதன் பிறகு என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். உங்கள் வங்கி விவரங்கள் மற்றும் UPI பின் தெரிந்து கொண்ட அந்த நபர்கள் நிச்சயமாக உங்கள் அக்கவுண்டில் இருக்கக்கூடிய பணத்தை திருடி விடுவார்கள்.எனவே முடிந்தவரை இது போன்ற ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பயன்படுத்தாதீர்கள். ஒருவேளை உங்களது வேலைக்கு அது அவசியமாக கருதப்பட்டால் நீங்கள் ட்ரான்ஷாக்ஷன்களை செய்யும் பொழுது அந்த அப்ளிகேஷன்களை திறக்க வேண்டாம். ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன்களை மூடிய பிறகு கூகுள் பே செயலியை திறந்து பண பரிவர்த்தனையை செய்யவும்.

Related Post

தியேட்டர் ஆபரேட்டரால் ஹிட்டான மெல்லத் திறந்தது கதவு

Posted by - September 13, 2023 0
கதையை முன்னும் பின்னும் மாற்றிப் போடுகையில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய மெல்லத் திறந்தது கதவு படத்தை இளம் இயக்குநர்களுக்கு ஒரு…

படு மாஸ் காட்டும் சன் டிவி சீரியல்கள் டிஆர்பி.. டாப் 5ல் கூட வராத விஜய் டிவி சீரியல்கள், முழு விவரம்

Posted by - October 18, 2024 0
டாப் சீரியல்கள் சின்னத்திரை தான் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் உயிர் மூச்சாக உள்ளது. படங்களை பற்றியும், அதில் வருபவர்களை தாண்டி சீரியல்கள், அதில் நடிக்கும் நடிகர்கள்…

1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. அருமையா இருக்கும்…

Posted by - December 20, 2023 0
தினமும் காலையில் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு…

உஷார்… 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவோருக்கு காத்திருக்கும் ஆபத்துகள்..

Posted by - April 11, 2023 0
சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும் என்றுதானே கேள்விப்பட்டிருப்போம். ஆனால், போதுமான தூக்கம் இல்லை என்றால் தான் உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.…

5 வருஷமா சாவடிச்சுட்டாங்க, செம போர்.. டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருந்த சீரியலை கழுவி கழுவி ஊற்றிய கதாநாயகன்

Posted by - February 16, 2023 0
5 வருடம் செம போர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரபல சீரியலின் கதாநாயகன். திரை துறையை பொறுத்தவரையில் வெள்ளி திரைக்கு ரசிகர் கூட்டம் இருப்பது போல், அனுதினமும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *