IPL 2023 : வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்…

247 0

டூப்ளசிசுடன், மேக்ஸ்வெல் இணைந்து அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 226 ரன்கள் குவித்தது. 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியால் 218 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.

ருதுராஜ்  3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அஜிங்யா ரஹானேவுடன் இணைந்த டெவோன் கான்வே அதிரடியாக ரன்களை குவித்தார். இந்த இணை 2 ஆவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரஹானே37 ரன்களில் வெளியேற, அரைச்தம் கடந்த கான்வே 45 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் சிக்சருடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் எடுக்க ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அம்பதி ராயுடு 14 ரன்களும், மொயின் அலி 19 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 10 ரன்களும் எடுக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை குவித்தது.

இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடியது. தொடக்க வீரர் விராட் கோலி 6 ரன்னில் வெளியேற அடுத்து வந்த மஹிபால் லோம்ரர் ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்டினார். 15 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் பெங்களூரு அணி இருந்தபோது, கேப்டன் டூப்ளசிசுடன், மேக்ஸ்வெல் இணைந்து அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மேகஸ்வெல் 36 பந்தில் 76 ரன்களும், டூப்ளசிஸ் 33 பந்தில் 62 ரன்னும் எடுத்தனர். அடுத்து வந்தவர்களில் ஷாபாஸ் 12 ரன்னும், தினேஷ் கார்த்திக் 28 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 218 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Related Post

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சூப்பர் ஓவர் த்ரில்.. ஸ்டார்க்கால் டெல்லி அபார வெற்றி

Posted by - April 17, 2025 0
ராஜஸ்தான் – டெல்லி அணி ஆடிய போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்ற நிலையில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில்…

கடைசி பந்து வரை உச்சக்கட்ட பரபரப்பு… 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது தல தோனி படை..!

Posted by - May 30, 2023 0
மழையால் 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணி, கடைசிப்…

தோனிக்கு கிஃப்ட் கன்பார்ம் ……

Posted by - April 12, 2023 0
சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்டவுள்ளார். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று…

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் சென்னை படை…

Posted by - May 28, 2023 0
ஐபிஎல் தொடரில் வெற்றிக்கரமாக வலம் வரும் தோனி தலைமையிலான சென்னை அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் – குஜராத் அணிகள் அகமதாபாத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *